உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசமான வானிலையால் 30 நிமிடம் வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர்; ஒடிசா முதல்வர் தவிப்பு

மோசமான வானிலையால் 30 நிமிடம் வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர்; ஒடிசா முதல்வர் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பிஜேடி தலைவர் வி.கே.பாண்டியன் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. பின்னர் ஜர்ஸுகுடா என்ற இடத்தில் பத்திரமாக தரையிறங்கியது.ஒடிசாவில் சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் நடக்க இருக்கிறது. இவை மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதற்காக ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் அவரது தனி செயலாளராக இருந்து தற்போது 5டி தலைவராக இருக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியனும் சேர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்.அந்த வகையில் இன்று பிரசாரம் முடித்து காரியார் பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்ட நவீன் பட்நாயக் மற்றும் வி.கே.பாண்டியன் ஆகியோர், புவனேஸ்வர் விமான நிலையத்தில் இறங்குவதாக இருந்தது. ஆனால் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சுமார் 30 நிமிடங்களாக தரையிறங்க முடியாமல் ஹெலிகாப்டர் வானில் வட்டமிட்டது. பின்னர் ஜர்ஸுகுடா என்ற இடத்தில் பத்திரமாக தரையிறங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
மே 07, 2024 04:10

இதுமாதிரி நிகழ்வு எனக்கும் ஏர் பட்டிரூக்கு அகர் தாலாவிலிருந்து கோல்கட்டா திரும்பும் போது வானிலையய் மோசமாகி ஆங்க்யா உர்தியெ அதன் இறக்கைய்கள் ஊர்தியும் உறுதியும் ஆட்டம் கண்டுகொண்டிருந்தது சில சமயம் கீழே இங்கும் கல்கத்தா நகர்ம கண்ணுக்கும் தெரியும் ராகு வெகு தூரம் சென்று மறுபடியும் வரும் போகும் ஒரு வழியா சடனாக runwaykku இறங்கியது அன்று ஊர்தியை ஓட்டிய ஒரு முதன் முறையாக இந்தியாவிலேயெ முதல் பெண்மணி பைலட் பின்னர் அவரைய்ய பற்றி கல்கி பத்திரிக்கையை அவருடன் கலந்துரையாடல் வெளியிட்டது


ஆரூர் ரங்
மே 06, 2024 21:45

ஒரு டவுன் பஸ் நிலையம் சைசில் இருக்கும் புவனேஸ்வரம் விமான நிலையத்தில் முன்னேறிய மாநில இந்நாள், நாளைய முதல்வரும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்துப் பார்த்திருக்கலாம்.


ஆரூர் ரங்
மே 06, 2024 21:45

ஒரு டவுன் பஸ் நிலையம் சைசில் இருக்கும் புவனேஸ்வரம் விமான நிலையத்தில் முன்னேறிய மாநில இந்நாள், நாளைய முதல்வரும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்து பார்த்திருக்கலாம்.


Ramesh Sargam
மே 06, 2024 19:47

தேர்தல் சமயங்களில் அரசியல் தலைவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும்


Premanathan Sambandam
மே 06, 2024 20:30

இந்திய அரசியல்வாதிகள் அதிஷ்டசாலிகள் ஆயுள் கெட்டி accident ஆனாலும் தப்பிவிடுவார்கள் சாவது ராணுவவீரன், போலீஸ், பொதுமக்கள்தான்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ