உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை வரும் தமிழக பக்தர்களுக்கு உதவி: சேகர்பாபு

சபரிமலை வரும் தமிழக பக்தர்களுக்கு உதவி: சேகர்பாபு

சபரிமலை: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் தமிழக பக்தர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.அமைச்சர் சேகர்பாபு இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தாண்டு தரிசனம் எளிதாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். தரிசனத்தில் நிறைய மாற்றம் தெரிகிறது. விஐபி தரிசனம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில் சுத்தமாக உள்ளது. எங்கும் குப்பையை பார்க்க முடியவில்லை. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சாமிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். தரிசன நேரம் அதிகரித்து உள்ளது. இதனால், அதிக பக்தர்கள் வந்தாலும் தரிசனம் எளிதாகி உள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை தமிழகத்தை சேர்ந்த பக்தர்களுக்கு உதவி செய்யும். கடந்த ஆண்டு தமிழக அரசு மற்றும் ஹிந்து அறநிலையத்துறை மூலம் பிஸ்கட் வழங்கப்பட்டது. மகர மற்றும் மண்டல பூஜையின் போது பிஸ்கட் வழங்கப்படும். கன்னியாகுமரியில் இருந்து இரண்டு கண்காணிப்பாளர்கள் அடுத்த வாரம் முதல் இங்கு பணிபுரிவார்கள். தமிழகத்தை சேர்ந்த பக்தர்களுக்கு தேவையான உதவிகளை நிச்சயம் தமிழக அரசு செய்யும்.தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்தில் நிரந்தர உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !