உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் இன்று (நவ. 28ல்) பதவியேற்கிறார்.ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும் வென்றது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, , கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன், இன்று (நவ.28ம் தேதி) முதல்வராக அவர் மட்டுமே பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 28, 2024 12:39

தமிழக முதல்வரின் நண்பர்களில் ஒருவர்.... அங்கேயும் மக்கள் ஊழலுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.. காரணங்கள் வறுமை, சாதிப்பற்று, அறியாமை .....


sankar
நவ 28, 2024 10:01

களவாணிகள் எல்லாம் கல்லாவில்


V RAMASWAMY
நவ 28, 2024 09:17

பதவிப்பிரமாண சத்தியத்தின்படி நடக்காதவர்கள், பதவி விலக வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை