உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹேமந்த்சோரன் என் ஆலோசனையை கேட்காததால் சிறை: ஜேஎம்எம் தலைவர்

ஹேமந்த்சோரன் என் ஆலோசனையை கேட்காததால் சிறை: ஜேஎம்எம் தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: 'ஹேமந்த் சோரன் எனது ஆலோசனையை பலமுறை புறக்கணித்து இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார்... அவர் எப்போதும் தவறான ஆலோசகர்களால் சூழப்பட்டுள்ளார்' என ஜேஎம்எம் மூத்த தலைவர் லோபின் ஹெம்ப்ரோம் கூறி உள்ளார்.பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜேஎம்எம் சட்டமன்றக் கட்சித் தலைவர் சம்பாய் சோரன் வெள்ளிக்கிழமை முதல்வராகப் பதவியேற்றார்.இந்நிலையில் ஜேஎம்எம் மூத்த தலைவர் லோபின் ஹெம்ப்ரோம் கூறி உள்ளதாவது: ஹேமந்த் சோரன் எனது ஆலோசனையை பலமுறை புறக்கணித்து உள்ளார். அவர் எப்போதும் தவறான ஆலோசகர்களால் சூழப்பட்டுள்ளார்'இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார் என்றார். சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் மற்றும் சந்தால் பர்கானாஸ் குத்தகை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஹெம்ப்ரோம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஹேமந்த் சோரன் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.முன்னதாக ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி எம்எல்ஏக்களை ஹைதராபாத்துக்கு மாற்றும் நடவடிக்கைக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் நாளை (05 ம் தேதி) திங்கட்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவு அளிப்பேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anand
பிப் 05, 2024 10:15

நம்ம விடியலுக்கு பல வகையில் ஆலோசனை சொன்னதால் தான் ஸ்பெயின் வரை சென்று உள்ளார்...அடுத்து


Ramesh Sargam
பிப் 04, 2024 23:51

திமுகவுக்கு கூட வைகோ பல யோசனைகள் கூறுகிறார். ஆனால் அவர்கள் கேட்பதில்லை. அவர்களும் சிறைக்கு செல்வார்களா?


Ramesh Sargam
பிப் 04, 2024 23:50

யாராவது யோசனை சொன்னால் கேட்டுக்கணும், புரியுதா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி