உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹெசரகட்டா பாதுகாப்பு பகுதி; அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

ஹெசரகட்டா பாதுகாப்பு பகுதி; அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

பெங்களூரு : ''பலவிதமான பறவைகள் வசிக்கும் ஹெசரகட்டா பகுதி, தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.இதுதொடர்பாக, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூருக்கு ஹெசரகட்டா மிகவும் அத்தியாவசியமான பகுதியாகும். இங்குள்ள ஏரி மற்றும் இதன் சுற்றுப்பகுதியை, மாநில அரசு, 'கிரேட்டர் ஹெசரகட்டா புல்வெளி பாதுகாப்பு பகுதி'யாக அறிவித்துள்ளது.எலஹங்கா வடக்கு தாலுகாவின் 5,678.32 ஏக்கரில், ஹெசரகட்டா பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இங்குள்ள இயற்கை பகுதிகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அமைச்சரவையில் அனுமதி அளித்த, அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றி.ஹெசரகட்டாவில் 133 விதமான பறவைகள், 40 விதமான தாவரங்கள், சிறுத்தை, ஓநாய் என, பல விதமான விலங்குகள், பறவைகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளது. இப்பகுதியை பாதுகாப்பது எங்களின் கடமையாகும். ஹெசரகட்டா ஏரி உட்பட பல ஏரிகள் உள்ளன. வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வந்து, இனவிருத்தி செய்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ