உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோமாவில் உள்ள கணவரின் வங்கி கணக்கில் பணம் எடுக்க மனைவிக்கு ஐகோர்ட் அனுமதி

கோமாவில் உள்ள கணவரின் வங்கி கணக்கில் பணம் எடுக்க மனைவிக்கு ஐகோர்ட் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ராஜாஜி நகரில் வசிப்பவர் டாக்டர் அனில்குமார். அரசு மருத்துவமனையில் பணியாற்றிய இவர், 2024 நவ., 12ல் ஓய்வு பெற்றார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பே, மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டது.அவரை, பெங்களூரு மருத்துவ மற்றும் ஆய்வகத்தின் நரம்பியல் பிரிவில் சேர்த்தனர். அனில்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அபூர்வமான நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டதாக கூறினர். தற்போது அனில்குமார் கோமாவில் இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தி, சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2024, ஜூன் 23 முதல் சிகிச்சையில் உள்ளார்.அவரது அன்றாட சிகிச்சைக்கும், குடும்ப செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. அனில்குமார் மூன்று வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார். அவர் எழுதவோ, கையெழுத்திடும் நிலையிலோ இல்லை. செலவுக்கு பணம் எடுக்க முடியவில்லை. எனவே தன் கணவரின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுக்கவும், நிர்வகிக்கவும் அனுமதி அளிக்கும்படி, மூன்று வங்கிகளிலும், அவரது மனைவி சந்தியா வேண்டுகோள் விடுத்தார்; போதிய ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.அவரது வேண்டுகோளை, வங்கிகள் நிராகரித்தன. இது குறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சந்தியா மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ''மனுதாரரின் கணவர் நரம்பு சம்பந்தப்பட்ட அபூர்வமான நோயால் அவதிப்படுகிறார். எனவே, சந்தியா அவரது கணவரின் கார்டியனாக நியமிக்கப்படுகிறார்.''தன் கணவருக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் இருந்து, பணம் எடுக்க வங்கிகள் அனுமதி அளிக்க வேண்டும். இவ்விஷயத்தில், எந்த காரணத்தை கொண்டும் வங்கிகள் தாமதம் காட்டக்கூடாது. இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம்,'' என, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 04, 2025 07:09

மீண்டும் இது போன்ற ஒரு நிலை எனது விவசாய நண்பர் சஞ்சீவியை பத்தி அடிக்கடி எழுதியுள்ளேன், அவரின் மகனுக்கு கல்லூரி fee கட்டுவதற்கு லிங்க் கொடுத்துள்ளார்கள், ஆனால் கனரா பேங்க் நிதி மாற்ற வகையில் 50000 மட்டுமே என்ற வரையறை வைத்துள்ளார்கள், அதனை அவர் கோரிக்கை வைத்து மாற்ற சொல்லியுள்ளார், 4 வேலைநாட்கள் ஆகி உள்ளது இன்னமும் செய்யவில்லை என்று கூறி அலைந்து கொண்டுள்ளார், ஒரு விவசாயியை நான்கு நாட்கள் அதுவும் நடவு நாட்களில் அலைய விடுவது எந்த வகையில் நியாயம் ?


GMM
மே 16, 2025 07:35

மருத்துவ சான்று, வாரிசு சான்று அடிப்படையில் மனைவி வங்கி கணக்கை நிர்வகிக்க வங்கி அனுமதித்து இருக்க வேண்டும். கடன் இருந்தால் யாரிடம் வங்கி வசூலிக்கும்? மேலும் நிதி விசயங்களில் நீதிபதி தீர்வு சொல்ல அதிகாரம் இருக்க கூடாது. வழக்கில் சில வக்கீல் பங்கு கேட்பது உண்டு. அரசு நிர்வாக பணியை நீதிமன்றம் செய்ய முடியும். ஆனால் நிர்வாகிகளை வீட்டிற்க்கு அனுப்பிய பின் செய்யலாம். ஒரே வேலைக்கு இரு அமைப்புகள் எதற்கு?


நிக்கோல்தாம்சன்
மே 16, 2025 07:10

அந்த வங்கிகளை கடுமையாக சாடியிருக்க வேண்டும் , அவர்கள் மீது மனிதாபிமானற்ற மனிதர்களை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காக தண்டனை கொடுக்கப்பற்றிருக்க வேண்டும்


மீனவ நண்பன்
மே 16, 2025 04:00

வயதான தம்பதியர் Either/Or என்று வங்கிக்கணக்கில் கட்டாயம் குறிப்பிட்டால் இந்த நிலைமை வராது ..நீதிமான்கள் கோடை விடுமுறைக்கு முன்னால் இப்படி தீர்ப்பு சொன்னது பாராட்டத்தக்கது


Kasimani Baskaran
மே 16, 2025 03:46

நல்ல வங்கிகள்... நீதிமன்றம் வரை செல்லவேண்டி இருக்கிறது.