உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குட் டச், பேட் டச் புரிந்து கொண்ட சிறுமிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

குட் டச், பேட் டச் புரிந்து கொண்ட சிறுமிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

மும்பை :தவறான நோக்கத்துடன் தொடப்படுவதை சரியாக புரிந்து கொண்ட சிறுமிக்கு பாராட்டு தெரிவித்துள்ள மும்பை உயர் நீதிமன்றம், அச்சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட ராணுவ அதிகாரிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது.வழக்கு ஒன்றில், மும்பை உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்தில் உள்ள ராணுவ அதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றும் வீரர் ஒருவரின் குடும்பத்தாரை 2020ல் வரவழைத்து சந்தித்துள்ளார். அப்போது அந்த வீரர் இல்லாத நேரத்தில், அவரது 11 வயது மகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.'குட் டச், பேட் டச்' எனப்படும் எது நல்ல தொடுதல், தவறான தொடுதல் என்பதை, அந்த சிறுமி நன்கு புரிந்து கொண்டுள்ளார். தன்னிடம் தவறாக நடக்க முயன்றதை அடுத்து, உடனடியாக அவர் குரல் எழுப்பி தன் தந்தையை வரவழைத்துள்ளார்.ஒரு தந்தையாக, தாத்தாவாகவே அந்தக் குழந்தையிடம் முத்தம் கேட்டதாக ராணுவ அதிகாரி கூறியுள்ளார். ஆனால், சிறுமியின் வாக்குமூலங்கள், அவரிடம் அந்த அதிகாரி தவறான நோக்கத்துடன் தொட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.ராணுவ போலீஸ் மற்றும் ராணுவ நீதிமன்றங்களின் விசாரணைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்கிறோம். தவறான தொடுதல் எது என்பதை சரியாக புரிந்து கொண்ட சிறுமிக்கு பாராட்டுகள்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2025 09:54

\ 2020ல் வரவழைத்து சந்தித்துள்ளார் // அப்போ கேசு நாலைஞ்சு வருசமா இழுத்துக்கிட்டு இருந்திருக்கு... இவ்வளவு சீக்கிரம், அப்போதே சிறுமிக்கு குட் டச், பேட் டச் தெரிந்துள்ளது என்பதைக் கண்டு பிடித்த நீதிபதி உண்மையிலேயே ஐ க்யூ அதிகம் பெற்றவர்தான் .....


RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2025 09:49

டுமீலு நாடா இருந்திருந்தா அந்த சிறுமி வாக்குமூலம் தர முடியாத அளவுக்கு முடித்து வைக்கப்பட்டிருப்பார் .....


முருகன்
பிப் 19, 2025 10:00

உன்னை எதில் சேர்ப்பது ஒவ்வொரு குழந்தையும் இதனை தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


Kasimani Baskaran
பிப் 19, 2025 06:15

இது திராவிட தமிழ் நாட்டில் நடந்து இருந்தால் அந்த பெண் பிள்ளைக்கு இலவசமாக ஏராளமான அறிவுரைகள் வந்திருக்கும். இன்னும் அந்த சார் யார் என்று காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. கார் வேறு இடையில் புகுந்து குழப்பி விட்டது...


Bye Pass
பிப் 19, 2025 04:43

அமெரிக்க குழந்தைகள் மற்றவர்களை தொடவிடுவதில்லை


Priyan Vadanad
பிப் 19, 2025 07:35

ஆமா ஆமா இவுரு கண்டாறு.


முக்கிய வீடியோ