உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்திடம் விளக்கம் அளித்த அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி

சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்திடம் விளக்கம் அளித்த அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் யாதவ் , சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசுகையில், பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் விருப்பப்படியே இந்த நாடு செயல்படும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் குழந்தைகளின் கண் எதிரே விலங்குகள் கொல்லப்படுகின்றன. இதை பார்த்து அந்த குழந்தைகள் வளர்கின்றனர். இந்த சூழ்நிலையில், அந்த குழந்தைகள் எப்படி கனிவாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பர்? அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்றாலும், சிலர் ஆபத்தானவர்கள். இவ்வாறு நீதிபதி பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதப்பட்டது.இது தொர்பாக சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட செய்தியில், அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் குமார் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பத்திரிகைகள் வாயிலாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. நீதிபதி நிகழ்ச்சியில் பேசிய விபரங்கள் அலகாபாத் ஐகோர்ட்டிடம் கேட்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.நீதிமன்ற விதிகளின்படி, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்ட நீதிபதி, கொலிஜியம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.இந்நிலையில், டில்லி வந்த சேகர்குமார் யாதவ், சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் முன்பு ஆஜராகி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அளித்தது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Narasimhan Krishnan
டிச 20, 2024 12:08

வரலாறு காணாத முதன்முறையாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த 4 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை எந்த பத்திரிக்கையும் கண்டனம் செய்யவில்லை என்பதால் சரி என்று ஆகிவிடுமா? அந்த காலகட்டத்தில் அந்த நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டு ஏன் கொலிஜியம் விசாரிக்கவில்லை என்றும் ஒரு நியாயமான ஒரு கேள்வி எழுமே. இதற்கு இப்பொழுது அமைக்கப்பட்ட புதிய கொலிஜியம் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அல்லது அரசாங்கத்திற்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பத்திரிக்கைகளுக்கு இது வெறும் அரசியல்தான் தற்போதைய சுப்ரீம் கோர்ட் கொலிஜி யத்திற்கு இது தொடர்பாக ஓரளவு வெளிப்படையாக ஒரு தார்மீகமாக கடமை இருக்கிறது. அப்படி செய்தால் சுப்ரீம் கோர்ட்டின் கௌரவம் மேலும் நன்கு நிலைநாட்டப்படும்.


தத்வமசி
டிச 18, 2024 20:32

கொலிஜியமே கலைக்கப்பட வேண்டிய ஒரு அமைப்பு.


Bala Subramaniam
டிச 19, 2024 11:52

எஸ். They are be havig as Dictator. Thinking them as Superior


GMM
டிச 18, 2024 08:35

நீதிமன்ற விதியில் கொலிஜியம் முறை இருக்கா? ஜனாதிபதி அவர்கள் அனுமதி இல்லாமல் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியிடம் நேரடியாக கொலிஜியம் விளக்கம் கேட்க முடியுமா? மத்திய அரசு நீதி துறையை அரசின் கீழ் கொண்டு வரும் போது மக்கள் பத்திரிகை அதன் செயல்பாட்டை அறிய முடியும். அரசுக்கு வெளியே, இரு வழக்கறிஞர்கள் ஒரு நீதிபதி தீர்வு பல விசயங்களை தீர்மானிக்கின்றன.


விவசாயி
டிச 18, 2024 07:37

என்ன விளக்கம், வழக்கம் போல் மன்னிப்பு கேட்டுருப்பாங்க!


ராஜ்மோகன்.V
டிச 18, 2024 07:02

மிகச்சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் உலகம் முழுவதும் அந்த குறிப்பிட்ட வமுறை ஆதரவு மதம்தான் பயங்கரவாததத்தை செய்து வருவது கண்கூடு. கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு..? கொலேஜியத்திற்கு விளக்கம் வேற..


kantharvan
டிச 20, 2024 22:35

விளக்கம் எதுக்கு . மாறுகால் மாறு கை வாங்கி இவனுக்கு சகிப்புத்தன்மையை கற்று கொடுக்க வேண்டும்.அதைவிடுத்து கொலிஜியமாம் விளக்கமாம் .


Kasimani Baskaran
டிச 18, 2024 06:15

நீதிபதி மதச்சார்பற்றவர்க இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் ஏன் கொலீஜிய சார்பற்றவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது இல்லை? கொலீஜியத்தில் காங்கிரஸ் சார்பு நீதிபதிகள்தான் அதிகம்.


சாண்டில்யன்
டிச 18, 2024 07:42

சுதந்திரம் பெற்ற அன்று காங்கிரஸ் அரசு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு செய்யப் பட்டவர்கள் அனைவருமே உயர் சாதி என்று சொல்லப் பட்டவர்கள் ஆனால் இன்றோ பச்சோந்திகளாகி இந்த அரசில் கோலோச்சுகின்றனரே இந்த உண்மைகளை போட்டுடைக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி பாசிமணி


நிக்கோல்தாம்சன்
டிச 18, 2024 04:28

அவர் கேட்டதில் என்ன தவறு ?


.Dr.A.Joseph
டிச 18, 2024 04:16

பொறுப்பில் இருப்பவர்கள் கல்வியறிவு பெறாதவர்கள் போல பேசுவது அறமில்லை.


சாண்டில்யன்
டிச 18, 2024 10:14

உயர் பொறுப்பிலுள்ளவர்கள் சிலர் சூதானமாக இருந்து ஆளுநராக, ராஜ்யசபா உறுப்பினராக பதவிகளை பெருகிறார்களே இந்த பிரத்யட்ச நிலையை புரிந்துகொண்டுதான் சிலர் இதுபோன்ற ஸ்டேட்மெண்டுகளை கொடுக்கிறார்கள் இதெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்களோ.. பல கற்றும் கல்லார் அறிவிலாதார்


ஜெய்ஹிந்த்புரம்
டிச 18, 2024 01:41

கடைந்தெடுத்த வன்மம். கோழி, ஆட்டுக்கறி என்றால் ஓகேவா?


தாமரை மலர்கிறது
டிச 18, 2024 00:06

சேகர் யாதவ் பேசியதில் எந்த தவறும் இல்லையென்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.


முக்கிய வீடியோ