உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிவு உபச்சார விழாவில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ஐகோர்ட் நீதிபதி : அப்படி என்ன அவருக்கு கோபம்

பிரிவு உபச்சார விழாவில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ஐகோர்ட் நீதிபதி : அப்படி என்ன அவருக்கு கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தூர்: என்னை இடமாற்றம் செய்தவர்களை கடவுள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார் என பிரிவு உபச்சார விழாவில் மத்திய பிரதேச இந்தூர் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி டி. வெங்கட் ரமணா தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. ஆந்திராவைச் சேர்ந்த இவர் கடந்த 2023 ல் மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற இந்தூர் கிளை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். வரும் ஜூனில் பணி நிறைவு பெறஉள்ள நிலையில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பிரிவு உபச்சார விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் கலந்து கொண்டு நீதிபதி டி.வி. ரமணா பேசியது, எனது சொந்த மாநிலமான ஆந்திராவில் இருந்து எந்தவித காரணம் இல்லாமல் நான் மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்திடம், எனது மனைவி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டும், நரம்பு சம்பந்தபட்ட நோயால் அவதியுறுவதால் உடனடிருந்து பார்த்துக்கொள்ள வேண்டி, என்னை கர்நாடாவிற்கு இடமாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.எனது கோரிக்கையை பரிசீலிக்காமல் வேண்டுமென்றே மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற இந்தூர் கிளைக்கு இடம் மாற்றம் செய்துவிட்டனர். என்னைத் துன்புறுத்தவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காரணமே இல்லாமல் வேறு மாநிலத்திற்கு என்னை இடமாற்றம் செய்து விட்டார்கள். இப்போது அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்களின் ஈகோவைத் திருப்திப் படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் கடவுள் அவர்களை மறக்கவோ அல்லது மன்னிக்கவோ மாட்டார். வேறு வழியில் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்.தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் எனது கோரிக்கையை பரிசீலிக்கலாம் ஆனால் காலம் கடந்துவிட்டது ஒய்வு பெற போகிறேன். இடமாறுதலால் மன அழுத்தம் இருந்தாலும் மத்தியப் பிரதேசத்தில் எனக்கு சக நீதிபதிகள் மற்றும் பார்கவுன்சில் நிர்வாகிகள் முழு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றிஇவ்வாறு நீதிபதி ரமணா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

K V Ramadoss
மே 25, 2025 07:07

பரிதாபம்தான் .. ஆனாலும் ஒரு நீதிபதிக்கான பக்குவம் இவரிடம் தெரியவில்லை..


Tetra
மே 23, 2025 21:30

கொலேஜியத்துக்கு இதை விட‌ அசிங்கம் வேறில்லை. கொலோஜியம் ஒழிக்கப்பட வேண்டும்


Karthik
மே 21, 2025 21:26

இவருக்கு மீண்டும் ஆந்திரா நீதிமன்றத்திற்கு மாற்றல் வழங்கப்பட்டிருந்தால் இவர் பொறுப்புள்ள கணவராக தன் மனைவியை கவனித்துக் கொண்டிருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உடல்நிலை சரியில்லாத தன் மனைவியை பார்த்துக் கொள்ளும் அதே நேரம் அவரால் எந்த அளவுக்கு நீதிமன்ற அலுவல்கள் மீது கவனம் செலுத்த முடியும் என்ற ஒரு கேள்வி எழுகிறது. மனைவி தான் முக்கியம் என்று இவர் எண்ணியிருந்தால் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊரில் இருந்தபடியே வழக்கறிஞராக தன் பணியை இவரால் தொடர்ந்து இருக்க முடியும் அதன் மூலம் வருமானமும் ஈட்ட முடியும் மனைவியையும் பார்த்துக் கொண்டிருக்க முடியும். அதை ஏன் இவர் செய்யவில்லை என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 23:47

நீதிபதி பதவி இராஜினாமா செய்து வக்கீலாக வேலை பார்த்தால் இவர் தானே கேஸ் பிடித்து வாதாடி காசு சம்பாதிக்க வேண்டும். நீதிபதி பதவி அப்படி இல்லையே.


ராமகிருஷ்ணன்
மே 21, 2025 21:10

நீதிபதிகளுக்குரிய பக்குவம் இல்லை. வெளிப்படையாக உள்ளக் குமுறலை கொட்டி விட்டார். வேறு காரணம் இருக்கலாம். இடம் மாற்றியவர்கள் தான் சொல்ல வேண்டும்.


ssh
மே 21, 2025 21:03

கொலிஜியம் ஒரு தேவையற்ற ஆணி


ஜெய்ஹிந்த்புரம், மதுரை
மே 21, 2025 20:54

ஒரு பொறுப்புள்ள நீதிபதி, சாதாரண அரசு ஊழியர் போல பேசுவது வேதனை தருகிறது...உங்களைப் போன்றோர், நேர்மையாக, ஒழுக்கத்துடன், நாட்டின் எந்த மூலையிலும், பணியாற்றினால், உங்களை சுற்றியுள்ளோருக்கு(மனைவி உட்பட) எந்த குறையும் நேராது..அனுபவத்தில் கூறுகிறேன்...


J.Isaac
மே 21, 2025 20:40

மனிதநேயம் குறைந்து வருகிறது


Ganapathy
மே 21, 2025 19:58

கொலீஜியம் என்ற இடதுசாரி செகுலர் சோஷலிச தான்தோன்றி அமைப்பை உடனே கலைக்கவேண்டும். இதிலிருந்து நீதிபதிகளும் தப்பவில்லை.


Gopalakrishnan Balasubramanian
மே 21, 2025 19:49

நீதிபதியே ஆனாலும் அவரும் மனிதர் தானே உங்கள் கஷ்டம் உங்களுக்கு பெரிது தான். அதற்காக அவர் கஷ்டத்தை பற்றி முழுதாய் எதுவும் தெரியாமல் நாலு வரி செய்தியை படித்துவிட்டு , உங்கள் பிரச்னையோடு ஒப்பிட்டு அவர் குறை ஒன்றும் பெரிதில்லை என சொல்வது நியாயமன்று.


மீனவ நண்பன்
மே 21, 2025 19:47

ராணுவ வீரர்களோ அதிகாரிகளோ இவரை மாதிரி ஆதங்கப்பட்டு புலம்ப வாய்ப்பிருக்கிறதா ? சொந்த மாநிலத்தில் வக்கீலாக வேலை செய்திருக்கலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை