உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வேணும்; சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த கேரளா ஐகோர்ட் உத்தரவு!

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வேணும்; சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த கேரளா ஐகோர்ட் உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஒவ்வொரு சுற்றுலா மையத்திலும் தினமும் அதிகபட்சம் எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதை நிர்ணயிக்கவும் கேரளா அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இயற்கை பேரிடர் தடுப்பு குறித்தும், சுற்றுலாப்பயணிகள் வருகையை முறைப்படுத்த கோரியும், மலை வாசஸ்தலங்களுக்கு அதிகம் பேர் செல்வதை தடுக்க கோரியும் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை நீதிபதிகள் ஏ.கே.,ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சியாம் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு:* கேரள மலை வாசஸ்தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனை பேர் அதிகபட்சம் வரலாம் என்பதற்கான எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும்.சுற்றுலாப்பயணிகளின் கட்டுப்பாடற்ற வருகையும், அதையொட்டி சுற்றுலா மையங்களில் நடக்கும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியும் மலைவாசஸ்தலங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, பயணிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.அதேபோல, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனப்பகுதிகளுக்கு தினமும் எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கும் அதிகபட்ச வரையறை நிர்ணயிக்க வேண்டும்.* மலைப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அக்டோபர் 25ம் தேதிக்குள் கட்டுப்பாடுகள் நிர்ணயம் செய்ய வேண்டும். * சீசன் மற்றும் சீசன் இல்லாத காலங்களில் சுற்றுலா வரும் வாகனங்களின் எண்ணிக்கை, பயணிகள் தங்குமிடம், பார்க்கிங் வசதிகள், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். * இந்த தகவல்களை ஒவ்வொரு மலை வாசஸ்தலம், சுற்றுலா மையத்துக்கும் தனித்தனியாக மாவட்ட நிர்வாகம் சேகரிக்க உத்தரவிடப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர், இந்த தகவல்களை சேகரித்து, மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.அவற்றை பெற்று, அக்டோபர் 25ம் தேதி அல்லது அதற்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R S BALA
செப் 07, 2024 18:12

நீங்களே அங்க இருந்துக்கோங்க..உங்களுக்குத்தான் வருமானம் போச்சு ஏரிமேல கோவம்ன்னா நட்டம் யாருக்கு..


V RAMASWAMY
செப் 07, 2024 15:48

இவையெல்லாம் மரமண்டைகளுக்கு தெரியவும் தெரியாது, புரியவும் புரியாது. சிங்கப்பூர் அரசிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம், அவர்கள் எல்லாவற்றிலும், குப்பை முதல் கோபுரம் வரை, விஞ்ஞான ரீதியாக கண்காணிக்கின்றனர்.


Sree
செப் 07, 2024 11:52

வெறி பிடித்த மாதிரி மலை நீர் தேக்கங்களில் பல மாடி கட்டடம் கட்ட லஞ்சம் வாங்கி அனுமதி கொடுத்தது கேரளா அரசு. ஆனால் பழி சுற்றுலா பயணிகள் மீது .எந்த ஒரு இடத்திலும் தங்கும் வசதி இல்லை எனில் ஐந்து மணிக்குள் சுற்றுலா வரும் பயணி அந்த இடத்தில தங்க மாட்டார்கள்


G Mahalingam
செப் 07, 2024 09:42

சுற்றுலா தலத்தில் டெண்ட் போட்டு தங்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். மாடி கட்டடம் கட்ட அனுமதிக்க கூடாது


அப்பாவி
செப் 07, 2024 09:36

சபரிமலையும் அப்படித்தான்.


ديفيد رافائيل
செப் 07, 2024 08:56

சுற்றுலா வருபவர்களால் உள்ளூர் மக்கள் தான் பாதிக்கின்றனர்.


புதிய வீடியோ