உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மக்கள் தொகையில் மாற்றங்கள் ஆய்வு செய்ய உயர்நிலை குழு அமைப்பு

 மக்கள் தொகையில் மாற்றங்கள் ஆய்வு செய்ய உயர்நிலை குழு அமைப்பு

- நமது சிறப்பு நிருபர் - நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் அதனால் ஏற்படும் இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய, உயர்நிலை குழுவை மத்திய அரசு அமை த்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மாறி வரும் மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்கள் குறித்து அரசியல் ரீதியான விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

ஊடுருவல்

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது டில்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, சட்டவிரோத ஊடுருவல்களால் ஏற்படும் விளைவுகள், பல்வேறு பகுதிகளில் இயற்கைக்கு மாறாக நிகழும் மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய, குழு அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி பிரகாஷ் நவால்கர் தலைமையில், இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆய்வு நடத்த உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர், உத்தர பிரதேச முன்னாள் தலைமை செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, பொருளாதார நிபுணர் டாக்டர் ஷமிகா ரவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உறுப்பினர் செயலராக மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பிரிவு செயல்படும். நாட்டின் எல்லை பகுதிகள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவல் மற்றும் இயற்கைக்கு மாறான பிற காரணங்களால் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து, இந்த உயர்நிலை குழு விரிவாக ஆய்வு நடத்தும்.

ஆபத்தானது

மதம் மற்றும் சமூக குழுக்களுக்கு இடையே ஏற்பட்டு இருக்கும் இயல்புக்கு மாறான மக்கள் தொகை பெருக்கத்தை மதிப்பிட்டு, திட்டமிடப்பட்ட காலக்கெடுவுடன் கூடிய தீர்வை வழங்கும். ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் மக்கள் தொகை மாற்றம் என்பது, எந்தவொரு நாட்டின் எதிர்காலத்திற்கும் சவாலானது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றம் ஆபத்தானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ManiK
மே 27, 2026 11:47

நாடு முழூவதும் புராஜெக்ட் ஜோஸ்வா மூலம் மதமாற்ற அறுவடை நடப்பது இந்த மத்திய அரசுக்கு தெரியாதா?..தெரியாத மாதிரி நடிக்கிறதா?, இதை ஆராய்ந்து தடுக்க நல்ல தைரியமான நடவடிக்கை தேவை.


vijay
மே 27, 2026 03:43

வாழறது கஷ்டமா ஆய்டும் இனி..


Kasimani Baskaran
மே 27, 2026 02:04

கள்ளக்குடியேறிகளை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை