உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 265 பேரை பலி கொண்ட விமான விபத்து; உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு

265 பேரை பலி கொண்ட விமான விபத்து; உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு

புதுடில்லி: குஜராத்தில் 274 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை குழுவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி மதியம் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 - 8 டிரீம் லைனர் விமானம், கிளம்பிய 30 வினாடிகளில், மருத்துவ கல்லூரியின் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணமாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டு, விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 265 பேரை பலி கொண்ட விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க, உயர்மட்ட விசாரணை குழுவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது. இந்த குழுவானது விபத்துக்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற விமான விபத்துக்களை தடுக்கவும், திறம்பட நிர்வகிக்கவும் ஒரு உறுதியான கட்டமைப்பை பரிந்துரைப்பதே இந்தக் குழுவின் முதன்மை நோக்கம் என்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

m.arunachalam
ஜூன் 14, 2025 09:58

நேர நெருக்கடி இல்லாமல் பணி செய்யும் சூழ்நிலையை பராமரிப்பு பணியாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் . செய்து முடித்த பணியை இரண்டு அல்லது மூன்று நிலைகளில் சோதனை செய்து உறுதி செய்ய வேண்டும் . பராமரிப்பு பணியின் போது கவன சிதறல் விபத்துகளுக்கு பிரதான காரணமாக உள்ளது . தெளிதல் நலம் .


GMM
ஜூன் 14, 2025 08:38

டாடா நிறுவன தயாரிப்பு பொருட்கள், தொழில் நுட்பம், பராமரிப்பு தரமானவையாக இருக்கும். அமெரிக்கா, இந்தியா தயாரிப்பு சீனாவை விட தரத்தில் பல மடங்கு மேல். இரு சக்கர ஆயுள் 15 ஆண்டுகள். அது போல் விமான ஆயுள் நிர்ணயிக்க முடியாதா? வெடித்து சிதறிய காரணம் சாதாரண மனிதர்கள் அறியமுடியாது. நிபுணர்கள் தேவை. கருத்து பதியும் போது கூட போயின் விமானம் உலகு எங்கும் பறந்து கொண்டு இருக்கும். டாடா நிறுவனத்தில் மிக பெரிய இழப்பு. இறந்தவர்கள் ஆன்மா அமைதி அடைய வேண்டும். புரிய முடியாத புதிர். இன்னும் பொது நல வழக்கு இல்லையா?


Kasimani Baskaran
ஜூன் 14, 2025 07:59

விமானத்துக்குள் என்ன நடந்தது என்று சொல்ல ஒருவர் உயிருடன் இருப்பது பல வித ஆதாரங்களை உறுதி செய்ய மிக அவசியமான ஒன்றாக இருக்கும். பறவை என்ஜினுக்குள் சிக்கியது அல்லது குண்டு வெடிப்பு அல்லது வேறு நாசவேலையா போன்ற விபரங்கள் விரைவில் வெளிவரும்.


Barakat Ali
ஜூன் 14, 2025 07:50

அடுத்த விமான விபத்து வரை இவர்களுக்கு பணப்பிரச்சனை இருக்காது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை