உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நலத்திட்டங்களுக்கு கோவில் நிதியை எதிர்பார்க்கும் ஹிமாச்சல் அரசு

நலத்திட்டங்களுக்கு கோவில் நிதியை எதிர்பார்க்கும் ஹிமாச்சல் அரசு

ஷிம்லா: கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஹிமாச்சல பிரதேச அரசு, நிவாரண பணிகளுக்கும், அரசின் நலத்திட்டங்களுக்கும் நிதி அளிக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து உள்ளது. இதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக கடந்த மாதம் 29ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஹிமாச்சல பிரதேச ஹிந்து மத அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் செயல்படும் சில அறக்கட்டளைகள், தொடர்ந்து அரசுக்கு பங்களிப்பை அளித்து வருகின்றன. மேலும் சில மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி கிடைக்கும் வகையில் பங்களிப்பை அளிக்கலாம் எனக்கூறப்பட்டு உள்ளது.எதிர்ப்புஇதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெய்ராம் தாக்கூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; அனைத்து நிதிகளையும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என அரசு தொடர்ந்து சுற்றறிக்கை அனுப்பி வருகிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமானது. கோவிட் அல்லது இயற்கை பேரிடர் காலங்களில் மனிதநேய பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் தேவைப்பட்டு இருந்தால், அது ஏற்றுக்கொள்ளக் கூடியது.ஆனால், ஒருபுறம் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சனாதன தர்மத்தை அவமானப்படுத்துகின்றனர். மறுபுறம் கொள்கைகளை செயல்படுத்த கோவில் நிதியை எதிர்பார்க்கின்றனர். இந்த முடிவு விசித்திரமானது. கோவில் அறக்கட்டளை மற்றும் பொது மக்கள் உட்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பதிலடிஜெய்ராம் தாக்கூருக்கு பதிலடி கொடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நல்ல நோக்கங்களுக்காக மாநில அரசு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அனாதை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கவும், சிறந்த வாழ்க்கை கொடுக்கவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கோவில் மட்டும் நிதி கேட்கவில்லை. குழந்தைகள் நலனுக்காக அனைவரிடமும் நிதி எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.நிதிப் பற்றாக்குறை ஏன்கடந்த 2023 ஆக., முதல் ஹிமாச்சல பிரதேச மாநிலம் தொடர்ச்சியாக காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 2023ல் ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக மாநில அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு, அசாம், பீஹார் மற்றும் டில்லி உள்ளிட்ட சில மாநில அரசுகள் நிதியுதவி அளித்தன.அதேநேரத்தில் மத்திய அரசு அளிக்கும் நிதி தங்களுக்கு போதவில்லை என ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு கூறினார். இதனால் மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஆக., மாதம் , முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் சம்பளம், போக்குவரத்து படிகளை பெற்றுக் கொள்ள மாட்டோம் என முதல்வர் கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

கண்ணன்
மார் 01, 2025 10:28

அவர்களது கட்சித் தலைமைக் புடும்பத்திடம் இல்லாத பணமா?!


c.mohanraj raj
மார் 01, 2025 06:24

பணம் இல்லாவிட்டால் போய் தற்கொலை செய்து கொள்ளவும்


Rangarajan Cv
பிப் 28, 2025 22:22

After abusing Hindus


Rajan A
பிப் 28, 2025 22:12

திராவிட வழியில் சேர்க்க வேண்டியது தான்


visu
பிப் 28, 2025 22:03

ஆமா இவனுங்க இலவசம் கொடுத்து ஆட்சியை பிடிப்பானுங்க அதுக்கு கோவில் நிதிதான் கிடைத்ததா ? பழைய ஓய்வூதிய திட்டம் கொண் டுவருவேன் என்று சொன்னவர்தான் இவர் இப்ப காசுக்கு தாளம்


ஆரூர் ரங்
பிப் 28, 2025 21:53

முன்னர் திருப்பதி ஆலய வருமானத்தை அரசு கஜானாவில் சேமிக்க வேண்டும் என அங்கிருந்த காங்கிரஸ் முதல்வர் (சென்னா ரெட்டி?) கூறப் போய் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் நில்லாமல் அந்நிதியில் குர்ஆன், பைபிள் அச்சடித்து இலவசமாக கொடுக்கபடும் என்றும் அறிவித்து பின்னர் பின்வாங்கினர.. யார் அப்பன் வீட்டு பணம்?. இது சோனியா காங்கிரசின் ஒரிஜினல் டிசைன் மாதிரி இருக்கு.


ஆரூர் ரங்
பிப் 28, 2025 20:41

அங்கு அரண்மனை போல பங்களா கட்டியுள்ள பிரியங்கா தனது கஜானாவிலிருந்து ஒரு பத்து சதவீதத்தை அளித்தாலே பிரச்சினை தீர்ந்துவிடுமே. எல்லாம் ஆட்டையைப் போட்ட துதானே?


GMM
பிப் 28, 2025 19:32

கோவில் நிதியை பயன் படுத்த விரும்பும் காங்கிரஸ், சர்ச், மசூதி நிதி விவரம் அறிய வேண்டும். புள்ளி கூட்டணி கட்சி நிதி இருப்பு தெரிந்து, காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் சேர்ந்து கொடுத்தால் தான் மக்கள் நல திட்டம் ஆகும். நிதியை ஏன் கேட்கிறாய் காங்கிரஸ். நிதி பொருளாக தானே மாறும். உணவு, உடை, இருப்பிடம் தானே வேண்டும். பொருளாக பெற்று கொள் காங்கிரஸ் .


D Natarajan
பிப் 28, 2025 18:57

khahgress உருப்படாத கட்சி.


Balaa
பிப் 28, 2025 18:32

ஆட்சிய பிடிக்க வாக்குறுதிகளை அள்ளி விடரது. அப்புறம் இளிச்ச வாயன் இந்துக்கள் கோவில சுரண்டறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை