உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 மாத சம்பளம் இல்லை: வேதனையில் ஹிமாச்சல் அரசு பஸ் டிரைவர் தற்கொலை

4 மாத சம்பளம் இல்லை: வேதனையில் ஹிமாச்சல் அரசு பஸ் டிரைவர் தற்கொலை

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் அரசு பஸ் டிரைவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நான்கு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக, இறப்பதற்கு முன்பு அவர் கூறிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது.இங்குள்ள மண்டி மாவட்டத்தில் தரம்பூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவராக இருப்பவர் சஞ்சய்குமார். இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு கடைசியாக அவர் பேசியதை குடும்பத்தினர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர்.அதில் அவர்,' தனக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலாளர் வினோத் குமார் என்பவர் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். என்னை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, எப்படி வேலை பார்க்க வேண்டும் என கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கும்' என அவர் மிரட்டி வந்ததாக கூறியுள்ளார்.தற்போது இந்த விவகாரம் மாநிலத்தில் புதிய அரசியல் மோதலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெய்ராம் தாக்கூர் கூறியதாவது: மாநில அரசு நிதி நிலைமையை மோசமாக கையாண்டு வருகிறது. வளர்ச்சி பணிகள் தடைபட்டு உள்ளன. ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டி உள்ளது. உயிர்காக்கும் மருந்து வாங்குவதற்கு உட்பட சுகாதார துறைக்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.இதனை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, 'பா.ஜ., தேவையில்லாமல் பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. உண்மையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதுடன் மக்களை பயத்தில் ஆழ்த்தி வருகிறது. பா.ஜ., ஆட்சியில் தான் மாநில அரசின் நிதி நிலைமை மோசமாக இருந்தது' என பதிலடி கொடுத்து உள்ளது.

பிரச்னைகள்

ஹிமாச்சல பிரதேச மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், பல மாதங்களாக தங்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், நிதி நெருக்கடி ஏற்படுவதாகவும், கடன் வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவதாகவும் புகார் தெரிவித்து உள்ளனர்.உயர் அதிகாரிகள் துன்புறுத்துவதாக ஊழியர்கள் புகார் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் டிரைவர்கள் மற்றும் நடத்துநர்கள் பலர், தங்களுக்கு அதிக வேலை வழங்கப்படுகிறது, தேவையில்லாமல் அபராதம் விதிக்கப்படுவதுடன், சிறுசிறு பிரச்னைகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என மிரட்டல் விடுக்கின்றனர் என குற்றம் சாட்டி உள்ளனர்.போக்குவரத்து கழக ஊழியர்கள், பாதுகாப்பு இல்லாத சூழலில் மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் உடல்நல பரிசோதனை ஏதும் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்கு முன்னரும் போக்குவரத்து கழக ஊழியர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார். 2023 மே மாதம், பணியில் இருந்த ஊழியர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Laddoo
ஜன 16, 2025 07:30

நேருவினால் கொண்டுவரப்பட்ட சோசலிசம் வந்த வழியே போக வேண்டும், அதாவது சமாதிக்கு. நன்றாக நடந்து கொண்டிருந்த தனியார் டிவிஎஸ் பஸ் சர்வீஸை தன் சொந்த பகை உணர்ச்சி காரணமாக அரசு மயமாக்கிய கட்டுவின் கேடு கேட்ட தனத்தை கூடிய விரைவிலேயே அதன் ஊழியர்கள் அனுபவிப்பர். இப்போதைய நிலையில் தனியார் பஸ் சர்வீஸ் பெஸ்ட்


raja
ஜன 16, 2025 03:44

இப்போ தெரிகிறதா தமிழா... இந்த ஊழல் விங்யானிக்கு தெருக்கு தெரு சிலைவைக்க மக்களின் பணத்தை சுரண்டும் திருட்டு ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்ப திராவிடர்கலும் அவனின் கொள்ளை கூட்டாளிகளும் ஓசி ஓசி என்று கூறி மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சியில் அமர்ந்து உழைப்பவன் ஊதியத்தை கூட திருடி கொண்டு மாடல் ஆட்சி நடத்தி கிரோம் என்று பெருமை பேசுகிறார்கள்...


தாமரை மலர்கிறது
ஜன 15, 2025 21:31

இலவசங்களை அள்ளிக்கொடுத்தால், மாநில அரசு திவால் ஆகும். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாது. விரைவில் தமிழகம் இந்த நிலையை அடைய விரும்பும் திராவிட குஞ்சுகளுக்கு வாழ்த்துக்கள்.


MARUTHU PANDIAR
ஜன 15, 2025 20:56

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. கர்நாடகா முதல் இமாச்சல வரை எல்லாமே


Gurumurthy Kalyanaraman
ஜன 15, 2025 18:39

குமார் என்ற பெயரை கேட்டல் அவர் உ.பி. அல்லது பீகார் சேர்ந்தவர் போல் தெரிகிறது. இவ்ரகள் எங்கே சென்றாலும் கீழே வேலை செய்வோரை அடிமையாகவே பாவிக்கிறாரகள். இந்த ஆளை கொலை குற்றத்தில் உள்ளே தள்ள வேண்டும்.


Gurumurthy Kalyanaraman
ஜன 15, 2025 18:33

நான் ஆறு மாதம் முன்பு ஹிமாச்சல் பிரதேஷ் ட்ரான்ஸ்போர்டில் சண்டிகரில் இருந்து மணாலி வரை சென்றேன். பண தட்டுப்பாடு காரணமாக என்னை அர்த்த ராத்திரியில் மூன்று பஸ் மாற வைத்தனர். சண்டிகர் ஏர்போர்ட்டில் நாங்கள் இரண்டு பேர் மட்டும் இருந்தோம். மணாலி இறங்கும் போது பஸ் முழுதும் நிரம்பி இருந்தது. ஏன் இத்தனை பஸ் மாற வைதீர்ககள் என்று கேள்வி கேட்டேன். அதற்கு மிக வினயமாக பண பற்றா குறைதான் காரணம் என்று டிரைவர் அனைவரும் பதில் கொடுத்தாரகள். எங்களுடைய luggage முழுவதும் அவரகள் தூக்கி வேறு பஸ்களில் மாற்றினாரகள். மரியாதையுடனும் விநயத்துடனும் நடந்து கொண்டாரகள். மாநிலம் முழுதும் எங்களை பிரியத்துடன் நடத்தினாரகள். இந்த தற்கொலை மிகுந்த வேதனை அளிக்கிறது.


RAJAKUMAR PT
ஜன 15, 2025 18:01

இலவசம் கொடுக்கும் அரசாங்கம் உறுப்படாது


Laddoo
ஜன 16, 2025 07:34

மிகவும் பணக்கார நகரமான துபையில் எதுவுமே இலவசமில்லை. மக்களை சுரண்டி கொழிக்கும் தமிழக அரசியல்வாதிகளின் பணம் இங்கே கொட்டிக் கிடக்கிறது.


RAJAKUMAR PT
ஜன 15, 2025 18:00

இலவசம் ஒழிந்தால் தான் நாடு உறுப்படும்


Sankar Ramu
ஜன 15, 2025 17:50

அனுதாபங்கள்?. பஸ் அறுமையா இருக்கு. ?


அசோகன்
ஜன 15, 2025 17:41

ஸ்டாலினிடம் கேட்டிருந்தால் எங்கு எங்கு எப்படி லட்சம் கோடிகளை கடனாக வாங்கி சுரண்டி இருக்கலாம் என சொல்லியிருபர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை