உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை: ராகுலுக்கு தொடர்பா?

அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை: ராகுலுக்கு தொடர்பா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக, 'ஹிண்டன்பர்க்' அறிக்கை வெளியானதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு ஆய்வு அமைப்பு, 2023ல் அறிக்கை வெளியிட்டது. தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனம், பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.இது, நம் நாட்டின் பங்குச் சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், கவுதம் அதானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் ரீதியிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.இந்நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலின் உளவு அமைப்பான, 'மொசாட்' இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளது.காங்கிரஸ் வெளிநாட்டு பிரிவு தலைவரும், ராகுலின் ஆலோசகருமான ஷாம் பிட்ராடோவின், 'சர்வர்' எனப்படும் கம்ப்யூட்டர் தகவல் அமைப்பில் இருந்து மொசாட் தகவல்களை சேகரித்தது.அதானி மற்றும் மோடிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், ஹிண்டன்பர்க் அறிக்கை தயாரிப்பதில், ராகுலுக்கு தொடர்பு இருப்பது தொடர்பான தகவல்கள் அதில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, ரஷ்யாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ஸ்புட்னிக்' என்ற பத்திரிகையின் இந்திய பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது குறித்து இஸ்ரேல், மொசாட் அமைப்புகள் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. காங்கிரஸ் கட்சியும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பல்லவி
ஏப் 25, 2025 21:39

வடக்கன்ஸ் எல்லாம் சில்லறை மாணவர்கள் தான் போல


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 14:19

பப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இல்லையென்றால் தான் அதிசயம்.


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 08:52

கான் கிராஸ் கட்சி ஒழிந்தால்.. பாதி தீவிரவாதம் ஒழிந்து விடும்.. அவர்கள் தான் தீவிரவாதிகளின் பாதுகாவலர்கள்.


வாய்மையே வெல்லும்
ஏப் 25, 2025 08:00

பப்பி புருஷர் கூபேர்டு ஓட்டேரா நேற்று காஷ்மீர் தேசவிரோத வார்த்தை விட்டிருக்கிறார். அவரை பிடிவாரண்ட் கொடுத்து செம்மதியாக அப்பிவிடுங்க. கொடுக்குற அடியில் கூடவே பப்பிம்மா கதறல்ஸ் கேட்கும். இதைப்பார்த்து , அக்கா புருஷர் பாசத்தில் பப்புவும் கூவுவார். அப்போ ஆரம்பிங்க ஹிண்டர்பர்க் கச்சேரியை.. ஒவ்வொன்றாக கள்ள ஆடு சிக்கும் .


Dr. Ayyappan J
ஏப் 25, 2025 07:55

No Surprise....


Indhuindian
ஏப் 25, 2025 06:36

கை புண்னுக்கு கண்ணாடி வேணுமா?


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஏப் 25, 2025 06:22

காங்கிரஸ் என்றாலே தேச விரோத கட்சி.


Kannan Chandran
ஏப் 25, 2025 06:19

இந்தியாவை அழித்தே தீரவேண்டும் என்ற ஒற்றை சிந்தனையில் வாழும் இழிபிறவிகள்..


raja
ஏப் 25, 2025 06:19

செஞ்சிருப்பான் இந்த கேடுகெட்ட இழிபிறவி ரா குள்.. அந்நிய நாட்டுக்கு சென்று இந்தியாவை பற்றி அவதூறாக கூறுபவன்...


Balasubramanian
ஏப் 25, 2025 06:15

வள்ளுவர் சொன்னது போல உட்பகை ! வெளியில் இருந்து வரும் தீவிரவாதிகளை கூட சமாளித்து விடலாம்! இத்தகைய செயல்களினால் எத்தனை சாமானியர்கள் தங்கள் முதலீட்டை இழந்து உள்ளனர் என்பதை கணிக்க இயலாது!


புதிய வீடியோ