உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆஸ்கர் விருதுக்கு ஹிந்தித் திரைப்படம் பரிந்துரை

ஆஸ்கர் விருதுக்கு ஹிந்தித் திரைப்படம் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ' ஹோம்பவுண்ட் ' என்ற ஹிந்தித் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக இருக்கும். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சாமுவேல் கோல்ட்வின் தியேட்டரில் வழங்கப்படும்.இந்நிலையில் 2026 ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த சர்வதேச பட விருதுக்கு ஹோம்பவுண்ட் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுகரன் ஜோகர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் தயாரித்த இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர்கள், எடிட்டர், பத்திரிகையாளர் என 12 பேர் கொண்டு குழுவினர் இப்படத்தை பார்த்து தேர்வு செய்துள்ளனர்.இந்தப் படம் ஏற்கனவே கேன்ஸ் 78 வது திரைப்பட விழாவிற்கு தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை