உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம்

வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய பட்ஜெட் அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: மத்திய பட்ஜெட் அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட். இந்த பட்ஜெட் மக்களின் சேமிப்பையும், முதலீட்டையும், நுகர்வையும் அதிகரிக்கும். நிதியமைச்சர் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கு வாழ்த்துகள். இது ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் நிறைவேற்றும் பட்ஜெட். இளைஞர்களுக்காக பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vo3w243f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அணுசக்தியில் தனியார் துறையை ஊக்குவிப்பது வரலாற்று சிறப்புமிக்கது. இது நாட்டின் வளர்ச்சியில் பெரிய பங்களிப்பை உறுதி செய்யும். பட்ஜெட் மக்களின் பாக்கெட்டுகளை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், சீர்திருத்தங்களை நோக்கி முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். வளர்ச்சிக்கு வேகம் சேர்க்கும் பட்ஜெட்! இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் நமது கூட்டு முயற்சிக்கு, வேகம் சேர்க்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை