உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா ஷாக்; ஹெச்ஐவி தொற்றாளர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

கேரளா ஷாக்; ஹெச்ஐவி தொற்றாளர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

திருவனந்தபுரம்; கேரளாவில் ஹெச்ஐவி நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது, அதிர்ச்சியை அளிக்கிறது. கேரளாவில் இளைய சமுதாயத்தினர் மத்தியில் ஹெச்ஐவி தொற்றுகள் எண்ணிக்கை சமீப காலமாக உயர்ந்து வருகிறது. இந்த எண்ணிக்கை உயர்வானது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்களின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.2024-25ம் ஆண்டில் புதியதாக கண்டறியப்பட்ட நோயாளிகளில் 14 சதவீதம் பேர் 19முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அதாவது நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 1213 நோயாளிகளில் 197 பேர் 19 முதல் 25 வயதுக்குள்ளானவர்கள். இந்த வயதில் உள்ளவர்கள் திருவனந்தபுரம், பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.இதுவே 2023-24ல் 181 பேர், 202-2023ல் 131 பேர், 2021-2022ல் 76 பேர் ஹெச்ஐவி தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 19 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள். இளைய சமுதாயத்தினரிடம் ஹெச்ஐவி தொற்று அதிகம் காணப்படுவதற்கு ஊசிகள், மாசுபட்ட ஊசிகள் மூலம் பச்சைக் குத்துதல் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவே காரணிகள் எனவும் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளன. இதை தவிர்க்க, கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 12, 2025 12:10

இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் கேரளாவில் நோய்களும் அதிகம். கொரோனா காலத்தில் கூட அங்கிருந்துதான் இந்தியா முழுவதற்கும் அந்த கொடிய வைரஸ் பரவியது. ஏன்? கம்யூனிஸ்ட்ஸ் என்கிற கொடிய நோய் அங்கு ஆட்சி புரிவதாலா?