உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் வசூலை அள்ளும் ஹாலிவுட் படங்கள்

இந்தியாவில் வசூலை அள்ளும் ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்களுக்கு இந்திய சினிமாவில் எப்போதும் வசூல் இருக்கும். அந்த வகையில் அடுத்தடுத்து வெளியான மூன்று ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் நல்ல வசூலை பெற்றுள்ளன. தமிழ் சினிமாவில் 'டூரிஸ்ட் பேமிலி' படத்திற்குப் பிறகு 50 கோடி வசூலைக் கடந்த படங்களாக கடந்த இரண்டு மாதங்களில் எதுவுமே அமையவில்லை. இத்தனைக்கும் தமிழில் சமீபத்தில் பறந்து போ, 3BHK போன்ற நல்ல படங்கள் வந்தன. ஆனால் அவை பெரிய வசூலைக் குவிக்கவில்லை. இனி வரும் வாரங்களில் வெளியாக உள்ள படங்களில் சில முக்கிய படங்கள் வசூலைக் குவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஹிந்தியில் 'ஹவுஸ்புல் 5, சிதாரே ஜமீன் பர்' ஆகிய படங்கள் 200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்களாக அமைந்தன. தெலுங்கில் 'குபேரா, ஹிட் 3' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருந்தன.இந்நிலையில் இந்தியத் திரைப்படங்களுக்கு இணையாக கடந்த இரண்டு மாதங்களில் சில ஹாலிவுட் படங்கள் நல்ல வசூலை இங்கு பெற்றுள்ளன. கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி வெளியான 'எப் 1' படம் இந்தியாவில் மட்டும் 80 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது. அதேப்போல் ஜூலை 1ம் தேதி வெளியான 'ஜூராசிக் வேர்ல்டு - ரீ பெர்த்', படம் 100 கோடி வசூலை நெருங்கி உள்ளது. கடந்த வாரம் ஜூலை 11ல் வெளியான 'சூப்பர் மேன்' படம் அதற்குள்ளாகவே 40 கோடி வசூலை பெற்றுள்ளன.இந்த வருடம் இதுவரையில் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் 'மிஷன் இம்பாசிபிள் - தி பைனல் ரெக்கனிங்' படம் 110 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natarajan Ramanathan
ஜூலை 19, 2025 01:44

விமர்சனங்களால் ஏமாந்து போனவாரம் பறந்து போ படத்தை பார்த்தேன். அந்த படத்தில் நடித்த சிறுவனின் செயல்பாடுகள் மிகவும் எரிச்சலை கொடுப்பதாகவே இருந்தது. இந்த மாதிரி நடந்துகொள்ளும் சிறுவனை ஒரே அரையில் நல்வழிப்படுத்தாமல் கேவலமா படம் பாடம் எடுத்திருக்காங்க.


கோமாளி
ஜூலை 18, 2025 15:25

மேலே குறிப்பிட்டுள்ள 3 ஆங்கில படங்களும் குப்பைகள். ஒரு விறுவிறுப்போ கதையில் வேகமோ ரசிக்கும்படியான காட்சிகளோ இல்லை. தெலுங்கு படத்தின் ஆங்கில டப்பிங் போல இருந்தது


தியாகு
ஜூலை 18, 2025 14:35

இதெல்லாம் ஒரு பெருமையா, எங்க தமிழ்நாட்டில் ஒரு வேலையும் செய்யாமல், அடுத்தவர் உழைப்பை திருடி வாழும், எந்த ஒரு கதையும் இல்லாத குப்பை படங்களை தயாரிக்கும் ஒரு படத்திற்கு மினிமம் 200 கோடி லாபம் வந்ததாக கணக்கு காட்டுவார்.