உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு சிக்கல்! வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு அனுமதி

கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு சிக்கல்! வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; மதுபான ஊழல் முறைகேடு தொடர்பாக டில்லி மாஜி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மீது வழக்கு நடத்த அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. டில்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரு,2800 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xmnhvb3s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால், வழக்கில் இருந்து விடுதலையான பின்னரே முதல்வராக பதவியில் அமருவேன் என்று கூறி இருந்தார். இந் நிலையில் இந்த வழக்கில் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா இருவர் மீதும் வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. தற்போது டில்லி சட்டசபை தேர்தல் தேதி பிப்.5ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பா.ஜ., ஆம் ஆத்மி, காங். உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே களம் காண்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, டில்லி தேர்தல் கள அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்தாண்டு நவ.6ம் தேதி சுப்ரீம்கோர்ட் ஒரு முக்கிய தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றவியல் நடைமுறை சட்டப்படி, அரசு ஊழியர் ஒருவரை, அரசின் முன் அனுமதியின்றி பணமோசடி வழக்கில் கைது செய்ய முடியாது என்று கூறி இருந்தது.இதை தொடர்ந்து, வழக்கு தொடர அனுமதி கோரி டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவுக்கு அமலாக்கத்துறை கடிதம் ஒன்றையும் எழுதியது. அதன் பின்னர், சக்சேனாவும் வழக்கு தொடர ஒப்புதல் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

MARUTHU PANDIAR
ஜன 16, 2025 15:37

இந்த ஸ்பெஷல் கிரிப்டோ தேர்தல் நேரம் என்பதால் ரொம்ப பவ்யமாய் நெற்றியில் சிந்தூரம் எல்லாம் வைத்துக் கொண்டு முன்னை விட அதிகம் தனது விஷப் புன்னகையை தவழ விட்டுக் கொண்டு வலம் வருகிறான்மக்களை ஏமாற்ற


Alagusundram Kulasekaran
ஜன 16, 2025 12:21

தமிழ் நாட்டில் மதுபான வருமானத்தை நம்பி ஒரு கேவலமான திராவிட மாடல் அரசு


Indhuindian
ஜன 15, 2025 14:27

புடிச்சு ஒரு பத்து வருஷம் உள்ளே தள்ளுங்க கொசுங்க தொல்லை தாங்க முடியலை


SUBBU,MADURAI
ஜன 15, 2025 14:58

Few months ago, Delhi High Court questioned the AAP govt about the lack of infrastructure in government schools in the capitals Northeast district. But no media outlet debated on this issue.


GMM
ஜன 15, 2025 14:22

அரசு ஊழியரை அரசு விசாரணை அமைப்புகள் விசாரிக்க முன் அனுமதி தேவை. வழக்கு தொடர அனுமதி தேவையில்லை. கைது செய்ய தகவல் கொடுத்தால் போதும். அரசு துறை மாற்று ஏற்பாடு செய்ய தகவல் தேவைப்படும். விசாரணைக்கு பின் தண்டனைக்கு முன் நீதிமன்றம் தலையிட நிர்வாக விதிகள் அனுமதிப்பது இல்லை. மாநில அளவில் நீதிமன்றம் அரசு ஊழியரை விசாரிக்க, தண்டிக்க, ஜாமின் கொடுக்க கவர்னர் முன் அனுமதி பெற வேண்டும்.


abdulrahim
ஜன 15, 2025 13:58

போர்ஜரிவால் அனுதாப ஓட்டில் ஜெயிக்க பாஜக வழி செய்கிறது, ஆக மொத்தம் வட மாநிலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு ஓட்டை பிரித்து பாஜகவின் வெற்றிக்கு உதவிய போர்ஜரிவாளுக்கு பாஜக நன்றி கடன் செலுத்துகிறது.


Ramesh Sargam
ஜன 15, 2025 12:50

சிறையில் அடைக்கவேண்டியது. பிறகு ஜாமீன் கொடுத்து வெளியில் விடவேண்டியது. பிறகு மீண்டும் சிறையில் அடைக்க முயல்வது. சிரிப்பா வருது நமது ஆட்சியாளர்களின், காவல்துறையினரின், நீதிமன்றங்களின் செயல்பாடுகள்.


sankaranarayanan
ஜன 15, 2025 12:44

இதுபோன்றே திராவிட மாடல் அரசியலிலும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி - பொன்முடி இவர்களது வழக்குகளையும் திரும்பவும் விரைவில் முழுவதுமாக அமலாக்கத்துறை விசாரிக்க மத்திய அரசு அனுமதித்ததால்தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்


AMLA ASOKAN
ஜன 15, 2025 12:29

ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு போரின் பொழுது குண்டு மலை பொழிவது போல், டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் BJP சர்க்கார் ஆம் ஆத்மி மீது அமலாக்கத்துறை தாக்குதலை கட்டவிழ்த்துள்ளது .கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மீது வழக்கு தொடர்வதால் அவர்களை ஊழல் வாதிகளாக காட்ட BJP முயற்சிக்கிறது .ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அமலாக்கத்துறை இன்று காலை தான் விழித்து கொண்டதா? மக்கள் இதை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. பிஜேபிக்கு வாக்களிக்கப் போவதுமில்லை . இந்திய தேர்தல் ஜனநாயகம் கேலிக்குரியதாகி வருகிறது .


Ganesh Subbarao
ஜன 15, 2025 13:14

வழக்கு போட சொன்னது நீதி மன்றம். போட்டது அமலாக்கத்துறை இதில BJP எங்க வந்தது? இந்த கும்பல் காசு அடிச்சிருக்குன்னு சொன்னது நீதிமன்றம் வந்துட்ட்டாங்க தூக்கிகிட்டு


SS
ஜன 15, 2025 11:42

கெஜ்ரிவால் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துகொண்டால் அதன்பிறகு இந்த வழக்குகள் எல்லாம் உறக்க நிலைக்கு செல்லும். அஜீத் பவார், நாராயண ராணே, ஹிமந்த பிஸ்வ சர்மா இவர்களையெல்லாம் பார்த்து கெஜ்ரிவால் கற்றுக்கொள்ள வேண்டும்


venugopal s
ஜன 15, 2025 11:15

அமலாக்கத்துறையும் மத்திய பாஜக அரசும் வேறு வேறா? இரண்டுமே ஒன்று தானே! அப்புறம் இதில் என்ன ஆச்சரியம்?


புதிய வீடியோ