உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் ரூ.920 கோடி ஹோண்டா முதலீடு

குஜராத்தில் ரூ.920 கோடி ஹோண்டா முதலீடு

புதுடில்லி:குஜராத்தின் விட்டல்பூர் பகுதியில் உள்ள உற்பத்தி ஆலையில், 920 கோடி ரூபாய் முதலீட்டில், நான்காம் அசெம்பிளி தடத்தை உருவாக்க உள்ளதாக, ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடம், 2027ல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தி திறன், 61.40 லட்சம் வாகனங்களாக உள்ளது. குறிப்பாக விட்டல்பூர் ஆலையின் உற்பத்தி திறன், 19.40 லட்சம் வாகனங்களாக உள்ளது. தற்போது, இந்த முதலீட்டின் வாயிலாக, 6.50 லட்சம் வாகனங்கள் கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும்.இதனால், இந்த ஆலையின் மொத்த உற்பத்தி திறன், 26 லட்சமாக உயர்வது மட்டுமின்றி, கூடுதலாக 1,800 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய, இந்த ஆலை மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும், 2028க்குள் மின்சார வாகனங்களின் உற்பத்தி துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Varadarajan Nagarajan
மே 24, 2025 07:41

டெட்ராய்ட் என்று தமிழகத்தை சொல்லிக்கொண்டிருக்கும்போது வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் பல இங்கு முதலீடுசெய்வதை தவிர்க்கின்றன. முதலீடுகளை ஏற்கின்றோம் என ஆட்சியாளர்கள் மாறி மாறி மார்தட்டிக்கொண்டாலும் மற்ற மாநிலங்கள் சைலண்டாக செயல்படுகின்றன. தற்சமயம் தமிழகத்தில் உள்ள பல தொழில் நிறுவனங்களில் நிறைய வடமாநில தொழிலாளர்கள்தான் வேலைசெய்கின்றனர். தமிழகத்தில் நமக்கு உழைக்கக்கூடிய தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது என்பது தெளிவாகின்றது. இதுவும் ஒரு முக்கிய காரணி. எனவே அரசு கவனம் செலுத்தி தடைகளை களைய முயலவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை