உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்

நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மோசமான வானிலை காரணமாக நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம், ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது எப்படி என்பது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 21ம் தேதி டில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானம், மோசமான வானிலையில் சிக்கி, பின் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானிகளின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0cj2ai6g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், விமானத்தின் முகப்பு பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக 227 பயணிகள் உயிர்தப்பினர். மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, வழக்கமான பாதையிலேயே, மோசமான வானிலையை எதிர்கொண்டு, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இது குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் அளித்திருப்பதாவது; டில்லியில் இருந்து கடந்த 21ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6இ 2142 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, மோசமான வானிலை நிலவியுள்ளது. வானிலை காரணமாக சர்வதேச எல்லையை நோக்கி விலகுவதற்காக இந்திய விமானப் படையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு, பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு, அந்நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், வேறு வழியின்றி, மோசமான வானிலையில் விமானத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு விமானிகள் தள்ளப்பட்டனர். ஆலங்கட்டி மழை மற்றும் கடுமையான காற்று காரணமாக விமானம் மேலும், கீழும் தள்ளப்பட்டது. இதனால், அதிகபட்ச இயக்க வேகத்தில் விமானம் செலுத்தப்பட்டது. இந்த சமயத்தில் விமானம் நிமிடத்திற்கு 8,500 அடி கீழ் இறங்கிய போதிலும், பைலட்டுகள் சிறப்பாக செயல்பட்டு, ஸ்ரீநகரில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இதில், யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. விமானத்தின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
மே 23, 2025 16:24

பாகிஸ்தானின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. நாங்க பஹல்காமில் என்ன கேட்டோம்???நாங்கள் ஒரே வழி ஒரே வார்த்தையில் இருப்பவர்கள். முஸ்லிம்கள் மட்டும் தான் எங்களுக்கு வேண்டியவர்கள் மற்றவர்கள் இறந்து போவதே மேல் - இப்படிக்கு பாகிஸ்தான்


murasan987
மே 24, 2025 00:42

ஏண்டா தீவிரவாதிகள் சுட்ட போது 12 முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் ஏவுகணையால் காஷ்மீர் முஸ்லீம்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் அப்புறம் எப்படி நீ கதை கட்டுற


என்றும் இந்தியன்
மே 26, 2025 17:33

இங்கே பாரு நீ முஸ்லிமாக இருந்து கொண்டு அவர்களுக்காகத்தான் பேசவேண்டும் அதுவும் சரிதான் ஆனால் இருப்பது இந்தியாவில் அப்போ இந்தியாவின் நன்மையைப்பற்றி பேசு


உண்மை கசக்கும்
மே 23, 2025 13:45

இங்கே இப்படி. உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவில் விமானம் பல மணி நேரம் வானில் சுற்றி சுற்றி வந்த பிறகு இறங்கியதாம். அந்த விமானத்தில் இருந்த பயணி , கனி அக்கா. பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல் பற்றி இந்திய நிலைப்பாடு பற்றி சொல்ல சென்று உள்ளார்.


Barakat Ali
மே 23, 2025 13:23

[பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு, அந்நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ] மதத்தைக் கேட்டு சுட்டவன் வாழும் நாடு ..... எப்படி அனுமதி கொடுப்பான் ????


murasan987
மே 24, 2025 00:44

ஏண்டா மதத்தை கேட்டு சுட்டால் ஏன் 12 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். முஸ்லீம் பெயரை வைத்துக் கொண்டு யாரை ஏமாற்றுகிறாய்.


Anbuselvan
மே 23, 2025 13:15

விமானி, துணை விமானி மற்றும் சிப்பந்திகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியா = திறமை இதை பொறுத்து கொள்ள முடியாமல் பலமுன்னேறிய மற்றும் முன்னேறிக்கொண்டுள்ள நாடுகள் எப்படியாவது இதை தடுத்து நிற்க போராடி கொண்டு வருகின்றன. முடியவில்லை. வாழ்க பாரதம்


Svs Yaadum oore
மே 23, 2025 13:11

பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு, அந்நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கோரியும் அனுமதி மறுக்கப்பட்டதாம் ..... இதனால், வேறு வழியின்றி, மோசமான வானிலையில் விமானத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு விமானிகள் தள்ளப்பட்டனராம்.......இந்த அக்கிரமத்தை கண்டித்து மத சார்பின்மை சமூக நீதி விடியல் கனி அக்கா கவர்னருக்கு எதிராக மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ....


Svs Yaadum oore
மே 23, 2025 13:07

பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு, அந்நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதாம் . இதனால், வேறு வழியின்றி, மோசமான வானிலையில் விமானத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு விமானிகள் தள்ளப்பட்டனராம்.....மத சார்பின்மை , சமூக நீதி , மனிதாபிமானம் , சகோதரத்துவம் என்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாய் கிழிய பேசின விடியல் இதுக்கு என்ன பதில் சொல்லுவானுங்க ??.....இத்தனை பொதுமக்கள் உயிருக்கு தவிக்கும்போது அதற்குக்கூட அனுமதி இல்லை ....இதுக்கு இந்த கேடு கெட்ட விடியல் திராவிடனுங்க பதில் சொல்லட்டுமே ??.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை