உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உங்க கட்சி எப்படி: மோடியை கேட்கிறார் கார்கே!

உங்க கட்சி எப்படி: மோடியை கேட்கிறார் கார்கே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'காங்கிரஸ், அர்பன் நக்சல்களால் இயக்கப்படும் கட்சி கிடையாது. பா.ஜ., தான் பயங்கரவாத தொடர்புடைய கட்சி' என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.மாஹாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில், கடந்த 5ம் தேதி, விவசாயம் மற்றும் கால்நடைத்துறைகளில் ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது, 'காங்கிரஸ் கட்சியை, அர்பன் நக்சல்கள் தான் இயக்குகின்றனர்' என பிரதமர் மோடி கூறினார்.மோடியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து கார்கே கூறியதாவது:காங்கிரஸ் அர்பன் நக்சல் கட்சி என மோடி கூறி வருகிறார். அது அவரது பழக்கம். ஆனால் அவரது பா.ஜ., எப்படி? அவர்கள் தான் அநியாயக் கொலைகளில் தொடர்புடைய பயங்கரவாத கட்சி. காங்கிரஸ் கட்சியை அவ்வாறு சொல்வதற்கு மோடிக்கு உரிமை கிடையாது.ஹரியானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் அர்பன் நக்சல்கள் என்ற வார்த்தையை மோடி பயன்படுத்துகிறார். காங்கிரஸ் கட்சி, அர்பன் நக்சல்கள் இயக்கும் கட்சி அல்ல.இவ்வாறு கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Amjath
அக் 13, 2024 05:49

ஆளையும் , முகத்தையும் பாரு


Ganapathy
அக் 12, 2024 22:55

அட கூறுகெட்ட பயலே...நீதானே கர்நாடக இஸ்லாமிய பயங்கரவாத கல்லெறி கும்பல் மேல இருந்த கேசுகளை வாபஸ் வாங்குன? அதுக்கு பேரு என்ன?


saravanan
அக் 12, 2024 22:27

நக்சல்கள் என்பவர்கள் தான்தோன்றிதனமாக வாழும் ஒரு கும்பல் தங்களுக்கென ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு ஜனநாயக அமைப்புகளை நம்பாமல் தேர்தல் முடிவுகளையும் ஏற்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என வாழும் பொறுப்பற்ற கூட்டம். அவர்களின் நீட்சியாம் அர்பன் நக்சல்கள் பற்றி பிரதமர் குறிப்பிட்டது இப்போது புரிந்திருக்குமே


கிஜன்
அக் 12, 2024 21:49

நீங்க சவுண்ட் விட மட்டும்தானா ? ஹரியானா தேர்தல்ல ... தேர்தல் ஆணையத்தை கிழிச்சு தொங்க விடப்போறீங்கன்னு பார்த்த ... பழைய குமாரிஜி பாலிடிக்ஸ் ல சிக்கிட்டீங்களே ..


Jysenn
அக் 12, 2024 21:22

We have a Spineless central government which instead of fixing him and his son allows this rabid creature to roam free.


அப்பாவி
அக் 12, 2024 21:19

நீ நல்லா கூவு ...கூவிக்கிட்டே இரு... அப்பதான் பிஜேபி எல்லா பக்கமும் வரும்


ManiK
அக் 12, 2024 20:50

மோடி சொன்னது தப்புதான்- அர்பன் நக்சல்களால் இயக்கபடும் கட்சியல்ல காங்கிரஸ்.... அர்பன் நக்சல்களால் நடத்தப்படும் கட்சி


Ramesh Sargam
அக் 12, 2024 20:43

காங்கிரஸ் கட்சி, அர்பன் நக்சல்கள் இயக்கும் கட்சி அல்ல. ஆம், அர்பன் நக்சல்கலை இயக்குவது காங்கிரஸ் கட்சி.


vijai
அக் 12, 2024 20:38

காஷ்மீர் கதை உங்க congress ஆட்சியில் நறி போச்சு ,?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 12, 2024 20:38

மோடி சொன்னது தவறு தான். காங்கிரஸ் அர்பன் நக்சல்களால் இயக்கப்படும் கட்சி அல்ல. வெளிநாட்டு அர்பன் நக்சல்களால் இயக்கப்படும் கட்சி. பாகிஸ்தான் சைனா இத்தாலி அமெரிக்கா போன்ற வெளிநாட்டு அர்பன் நக்சல்கள் தீவிர வாதிகளால் இயக்கப்படும் கட்சி.


முக்கிய வீடியோ