உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அப்பவே சொன்னோம்; எங்க பேச்சு யாரு கேட்டாங்க... கோட்டைவிட்ட வயநாடு அதிகாரிகள்!

அப்பவே சொன்னோம்; எங்க பேச்சு யாரு கேட்டாங்க... கோட்டைவிட்ட வயநாடு அதிகாரிகள்!

வயநாடு; நிலச்சரிவால் பேரழிவு அபாயம் இருப்பதாக சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலுக்கான மையம் முன்பே எச்சரித்தும் வயநாடு கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோட்டைவிட்ட விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

வாழ்வாதாரம்

ஒரு நாளில் கேரள மாநிலம், வயநாட்டில் எல்லாமே மாறிப்போனது. அங்கு ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவு ஏராளமான உயிர்களை பறித்துக் கொண்டு போக, உயிர்பிழைத்த பலரும் வாழ்வதாரம் இன்றி தவித்து வருகின்றனர். மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வந்தாலும் பேரழிவு பகுதிகள் எதிர்காலத்தில் மனிதன் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடுமோ என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

முன்பே எச்சரிக்கை

இந் நிலையில் வயநாட்டில் நிலச்சரிவால் பேரழிவு ஏற்படும் என்று சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலுக்கான மையம் முன்பே எச்சரித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இம்மையம் வெளியிட்ட இந்த அலர்ட்டை வயநாடு கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோட்டைவிட்டதும் தெரிய வந்துள்ளது.

சூழலியல்

கல்பெட்டாவை மையமாக கொண்டு இயங்கி வரும் சூழலியல் மற்றும் வனவிலங்ககு உயிரியலுக்கான மையம் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தாமஸ் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் 6 கேள்விகளை வயநாட்டு கலெக்டருக்கு அனுப்பி இருந்தார். அதன் மூலமே இந்த தகவல்கள் எல்லாம் வெளி வந்திருக்கின்றன.

16 மணி நேரம்

பேரழிவு நிகழும் 16 மணி நேரம் முன்பே முண்டக்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆபத்து நேரலாம் என்பதை சுட்டிக்காட்டி மாவட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால் இதை அலட்சியப்படுத்திவிட்டு, ஜூலை 29ம் தேதி இரவு 10.35 மணிக்கு தான் மாவட்ட நிர்வாகம் அலர்ட் விடுத்துள்ளது.

அலர்ட்

கிட்டத்தட்ட சூழலியல் மற்றும் வனவிலங்ககு உயிரியலுக்கான மையம் விடுத்த எச்சரிக்கைக்கு பின்னர் 14 மணி நேரம் கழித்துத்தான் அலர்ட் அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இந்த அலர்ட் அறிவிப்பு போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதோடு நிலைமையின் தீவிரத்தையும் யாருக்கும் உணர்த்தவில்லை.

அக்கறை

பேரழிவு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் வயநாடு மாவட்ட நிர்வாகம் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நிலச்சரிவு ஏற்பட்ட தருணத்தில் பெரிதாக பேசப்பட்டது. தற்போது அது உண்மைதானோ என்று யோசிக்க வைக்க வைக்கும் அளவில் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கவி
செப் 05, 2024 00:49

இது நடந்தது 29 ஜூலை. இங்கு 29 ஆகஸ்ட் என்று உள்ளது!!! அதை எங்கு போய் முறையிடுவது???


Ramesh Sargam
செப் 04, 2024 13:25

அப்பவே சொல்லியும் உங்க பேச்சு கேட்காதவங்க, இப்ப இவ்வளவு விபரீதம் நடந்தபின்பும், நம் பேச்சை கேட்பார்களா..? ஹூ ஹூம் .... கேட்கவே மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் பாதிப்பில் சிக்கவில்லையே. அவர்கள் பத்திரமாக, பத்திரமான இடத்தில் குடும்பத்துடன் இருக்கிறார்கள். மற்ற மக்கள் பிரச்சினை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். வெட்கம். வேதனை.


Almighty
செப் 04, 2024 12:16

முதல்வர் விஜயன் எச்சரிக்கைகள் காற்றில் விடப்பட்டது என்று கூறிய போதெல்லாம் எப்படி முட்டு கொடுத்தார் என்பது ஊர் அறிந்த உண்மை. சிவாஜி சிலை கீழே விழுந்தற்கு போராட்டம் செய்யும் தற்குறிகள் இதற்கு போராட்டம் செய்தால் வரும் காலங்களில் இத்தகைய இடர்பாடுகள் தவிர்கப்படலாம்.


Tiruchanur
செப் 04, 2024 11:52

எங்க குடியேறினாலும் அந்த இடம் குட்டிச்சுவர் தான் ஆகும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் அங்கே இருந்த ஜமாஅத் தான். அவர்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்தது அந்த பயலுங்க தான். இதை கேரளா சட்டஸபையிலேயே கான் க்ராஸ் உறுப்பினரே சொல்லியிருக்கிறார்


சமூக நல விரும்பி
செப் 04, 2024 09:38

மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகள் யாரும் சரியாக வேலை செய்வது இல்லை


sethu
செப் 04, 2024 09:25

தினமலரின் மென்மையான சூட்டுதல் திருமாவையும் மிஞ்சியதாக முட்டுக்கொடுப்பதாக வாசகர்களாகிய நங்கள் அறிகிறோம் அதென்ன வயநாடு ஆட்சியர் நிர்வாகம் கோட்டைவிட்ட்து என சாமரம் வீசுவது சரியா . இதற்குப்பெயர் அலட்சியம் மக்கள் விரோதம் நிர்வாக சீர்கேடு தரம் இல்லாத அரசு மற்றும் ஊழியர்கள் என சொல்லவேண்டும் .