உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்

கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

உலகளவில் உணர்வுகளை புண்படுத்துகிறது என கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.கம்போடியாவுடன் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றிய சம்பவம் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: தற்போது நடைபெற்று வரும் தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு ஹிந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். இந்த கோவிலில் உள்ள ஹிந்து சிலை நாகரிகப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதி முழுவதும் உள்ள மக்களால் ஆழ்ந்த பக்தியுடன் போற்றி வணங்கப்படுகிறது.பிரதேச உரிமைக் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இதுபோன்ற அவமரியாதையான செயல்கள் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றன, மேலும் இவை நடக்கக்கூடாது. இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிக்குத் திரும்பி, அமைதியை மீட்டெடுக்கவும், மேலும் உயிர் இழப்புகள் மற்றும் சொத்துக்களுக்கும் பாரம்பரியச் சின்னங்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கவும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

naranam
டிச 26, 2025 03:19

வெளி நாட்டில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுப்பது இருக்கட்டும். தமிழ் நாட்டில் கோயில்கள் திமுக ஆட்சியில் படிப்படியாக அழிக்கப்படுவதை யார் தடுப்பது? வேதனையாக இருக்கிறது.


naranam
டிச 26, 2025 03:15

புத்த மதத்தை சேர்ந்த சிங்களவர்களின் கொடூரம் உச்ச கட்டம்.. புத்தர் பேரைச் சொல்லிக்கொண்டு இலங்கையில் தமிழர்களைக் கொடூரமாக கொன்றவர்கள் அவர்கள்.


சண்முகம்
டிச 25, 2025 16:14

இலங்கை, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருப்பவர்கள் புத்த மக்கள். இவர்கள் மற்ற மதங்களை வெறுப்பவர்கள்.


Suppan
டிச 25, 2025 12:42

உலகப்புகழ் பெற்ற அங்கோர்வாட் கோவிலில் விஷ்ணு, மஹாலக்ஷ்மி சிலைகள் உள்ளன. ஆனால் மஹாலக்ஷ்மி சிலைக்கு தலை மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பூஜாரிக்கு ஒரு பவுத்தர்தான் அதைபற்றி ஒன்றும் தெரியவில்லை. பின்னமான சிலைகளை பூஜைக்கு வைக்கக்கூடாது என்றும் உரியவில்லை.


Anand
டிச 25, 2025 11:14

தாய்லாந்தும் கூட இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்ளும் என எதிர்பார்க்கவில்லை.


ANNADURAI MANI
டிச 25, 2025 12:04

வன்மையாக கண்டிக்க தக்க நிகழ்ச்சி


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 25, 2025 10:32

இதுவே ஈரோட்டு தாத்தா சிலையா இருந்திருந்தா நம்ம மாடல் ஜனத்தொகை மொத்தமும் பொங்கி வழிஞ்சிருக்கும். இப்போ இடிச்சா சிலையைப்பத்தியோ தாய்லாந்து கம்போடியா எல்லை சிவா விஷ்ணு கோவிலைப் பத்தியோ உபிஸ் க்கு ஒண்ணுமே தெரியாது


எஸ் எஸ்
டிச 25, 2025 10:01

இந்தியாவில் உபயோகத்தில் இல்லாத பாபர் மசூதியை இடித்ததற்கு உலகம் முழுக்க முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடப்பட்டன. இந்துக்கள் விஷயத்தில் மட்டும் இப்படி...


kumar
டிச 25, 2025 09:20

இந்துமத விரோதிகள் வேரறுக்கப்பட வேண்டும்


raja
டிச 25, 2025 09:20

இந்தியாவின் கண்டனம் வரவேற்கத்தக்கது, எந்த ஊர் மதத்தின் நம்பிக்கைகளையும் சீர்குலைக்க கூடாது


vbs manian
டிச 25, 2025 09:18

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சமர் செட் மாம் கம்போடியவில் உள்ள இந்தியா சிற்ப கலை சார்ந்த கோபுரங்கள் மூர்த்திகள் பெரிய விகாரங்கள் பற்றி சிலாகித்து எழுதியுள்ளார். உலக தரம் வாய்ந்த கலை படைப்புகள். இந்தியா கம்போடியா அந்த நாளைய உறவு கலாச்சார பரிமாற்றம் வியாபாரம் ஆகியவற்றை பறை சாற்றி நிற்கும் அழியா சுவடுகள். தொல் பொருள் கலா ரசிகர்களுக்கு பெரும் இழப்பு.


சமீபத்திய செய்தி