உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியின் தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்து சென்ற கணவர்

மனைவியின் தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்து சென்ற கணவர்

பெங்களூர: காதலித்து திருமணம் செய்த மனைவியை வெட்டிக் கொன்று, தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், ஹெப்பகோடியில் வசித்தவர் மானசா, 26. ஹென்னாகரா அருகில் காசநாயகனஹள்ளியில் வசிப்பவர் சங்கர், 28. இருவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள், சந்தாபுரா அருகில் உள்ள ஹீலலிகா கிராமத்தில் வசித்தனர்.சங்கர் தனியார் தொழிற்சாலையிலும், மானசா தனியார் நிறுவனத்திலும் பணியாற்றினர். மானசாவுக்கு முகிலன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது; நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சங்கர் இரவு ஷிப்ட் பணிக்கு செல்லும்போது, முகிலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் மானசா.ஜூன் 3ம் தேதி பணிக்குச் சென்றபோது, ''இன்றிரவு வீட்டுக்கு வர முடியாது; மறுநாள் வருவேன்,'' என, சங்கர் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் பணி முடிந்துவிட்டதால், நள்ளிரவே வீட்டுக்குத் திரும்பினார். வீட்டில் முகிலனுடன், மானசா இருந்ததை பார்த்து கோபம் அடைந்தார்.முகிலன் தப்பியோடிவிட்டார். மானசா மன்னிப்பு கேட்டார். இதை ஏற்க மறுத்த சங்கர், 'இனி நீ எனக்கு தேவையில்லை; கள்ளக்காதலனுடன் சென்றுவிடு' என, கூறி வீட்டை விட்டு விரட்டி அடித்தார்.இரண்டு நாட்களாக 'பேயிங் கெஸ்ட்' முறையில் தங்கியிருந்த மானசா, அவ்வப்போது வீட்டுக்கு வந்து, சங்கரிடம் கெஞ்சிப் பார்த்தார். அதே போன்று, நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும், சங்கர் திட்டி விரட்டினார்; மானசா செல்ல மறுத்தார். இருவருக்கும் காரசார வாக்குவாதம் நடந்தது.ஏற்கனவே குடிபோதையில் இருந்த சங்கர், மனைவியின் பேச்சால் கோபத்தின் உச்சிக்குச் சென்றார். அரிவாளை எடுத்து மனைவியை வெட்டிக் கொலை செய்தார். பின் அவரது தலையை துண்டித்து, கவரில் போட்டார்.நேற்று முன்தினம் இரவு, 11:30 மணி அளவில், துண்டித்த தலையுடன் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் சங்கர் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றார்.வழியில் சந்தபுரா - ஆனேக்கல் சாலையில் ரோந்து சென்ற போலீசார், அவரது சட்டையில் இருந்த ரத்தக்கறைகளை பார்த்து, சங்கரை நிறுத்தினர்.மனைவியை கொலை செய்து, தலையுடன் போலீசில் சரணடைய செல்வதாக சங்கர் கூறியதைக் கேட்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குச் சென்று தலையில்லா சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.வழக்குப் பதிவு செய்து, சங்கரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V.Mohan
ஜூன் 09, 2025 08:42

அந்தப் பெண் கர்நாடகாவில் பிறந்து வாழ்ந்தாலும், சரியாக பெரியார் கொள்கையை ஃபாலோ செய்துள்ளார். ஆகவே பெரியார் கொள்கையை ஃபாலோ செய்தவரை,, கர்நாடகா திராவிடர் கழகத்தில் ஆனேகல் பகுதி வட்டச் செயலாளராக்கி இருந்தால், அவர் உயிர் பிழைத்து இருப்பார். அந்த கணவன் சங்கர் கொலை செய்வதிலிருந்து தப்பி இருப்பார். கடைசியில் பாவம் அந்த 4 வயது பெண்குழந்தை. அந்த கொள்கை பரப்பு செயலாளர் திரு.முகிலன் அந்த பெண் குழந்தையை தன் இச்சையின் செளகரியத்திற்காக கொண்டு செல்லாமல் இருப்பாராக என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.


Mecca Shivan
ஜூன் 08, 2025 20:54

சுபவீ இந்த கொலையை வன்மையாக கண்டிக்கிறார் ..திருமணம் கடந்த உறவு என்பது திராவிட கலாச்சாரம் இதை கள்ளத்தொடர்பு என்று கொச்சை படுத்தியது மிக தவறு


Rathna
ஜூன் 08, 2025 18:57

பெண்களோ ஆண்களோ எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைத்து விட்டால் இது தான் கதி. குழந்தைகளின் நிலை தான் பரிதாபம்.


பெரிய குத்தூசி
ஜூன் 08, 2025 11:04

செய்துவிட்டார், கணவருக்கு ஜெயில் உறுதி. ஒரு செயலுக்கும் அதே தண்டனைதான் இன்னொன்று சேர்த்து செய்தலும் அதே தண்டனைதான். கள்ளகாதலனையும் சேர்த்து செய்திருக்க வேண்டும். மனைவி ஏன் தவறு செய்தால் என இருவரும் பேசி கரையை கண்டுபிடித்து சரி செய்ய மனைவிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். இப்போது பெண் குழந்தையின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியில் நிற்கிறது. அப்பா அம்மா உடன் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு மனித மிருங்கங்களால் புதியவர்கள் நீங்கலாக 2 வயது குழந்தைக்கு கூட வயது பார்க்காமல் உறவினர்கள், நண்பர்கள் தெரிந்தவர்களால் தினசரி பாலியல் சீண்டல் கொடுமைகள் வருகிறது. தந்தை ஜெயிலுக்கு சென்றபின் இந்த பெண் குழந்தைக்கு என்னென்ன கஷடங்கள் வரப்போகிறதோ. தந்தைக்கும் பெண்குழந்தைக்கும் சேர்த்து பிராத்திப்போமாக. கடவுள் அவர்களுக்கு அருள் புரியட்டும்.


A P
ஜூன் 08, 2025 10:44

கொலைகாரக் கணவன் கூறுவது அத்தனையும் உண்மையெனில், அவன் செய்த கொடுஞ்செயல் மன்னிக்கப் படவேண்டியதே. இதை போல கணவன் கள்ள உறவு வைத்திருந்தாலும், மனைவி இந்த கொடுஞ்செயல் செய்தாலும் மன்னிக்கப் படவேண்டிய செயலே. இது பாரத திருநாடு. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே பாரத கலாச்சாரம். அதெயெல்லாம் மீறுவதே திருட்டு கலாச்சாரம் . காலிப் பயல்கள்.


S.kausalya
ஜூன் 08, 2025 08:31

மனைவியை சேர்த்து கொள்ள வேண்டாமே . ஆனால் எதற்க்கு அவளை கொலை செய்தார் . 4 வயது குழந்தையை பற்றி நினைக்காமல் அவள் தன் சுகம் மட்டுமே குறி என்று இருந்தாள். சரி அப்பாவாக இவனாவது குழந்தை பற்றி நினைத்து இருந்து இருக்கலாம்.அந்த பெண் குழந்தை தான் பாவம்


VENKATASUBRAMANIAN
ஜூன் 08, 2025 08:20

கலாச்சார சீரழிவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை