மேலும் செய்திகள்
மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை
19-Sep-2024
கணவரின் 2வது திருமணத்தில் ரகளை செய்த முதல் மனைவி
22-Aug-2024
மங்களூரு: இரண்டாவது மனைவியுடன், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி காசிபட்டணா கிராமத்தைச் சேர்ந்தவர் நோனய்யா பூஜாரி, 63. இவரது மனைவி பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பேபி, 46, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் பேபி மன வருத்தத்தில் இருந்தார்.இந்நிலையில், நோனய்யா பூஜாரி, சில மாதங்களாக கடும் தலைவலியால் அவதிப்பட்டார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. மனம் உடைந்த அவர், தற்கொலை செய்ய முடிவு செய்தார். இது பற்றி தனது மனைவி பேபியிடமும் கூறினார்.குழந்தை இல்லாததால் வருத்தத்தில் இருந்த பேபி, 'இரண்டு பேரும் சேர்ந்து தற்கொலை செய்வோம்' என கூறியுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடமும் பேபி கூறியுள்ளார்.தம்பதியை, பக்கத்து வீட்டினர், உறவினர்கள் சமாதானம் செய்தனர். ஆனாலும் நேற்று காலை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் இருவரும் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். வேணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Sep-2024
22-Aug-2024