உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போனில் தலாக் கூறிய கணவர்; உ.பி.,யில் மனைவி தற்கொலை

போனில் தலாக் கூறிய கணவர்; உ.பி.,யில் மனைவி தற்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோரக்பூர் : உத்தர பிரதேசத்தில், போனில் மூன்று முறை 'தலாக்' என கணவர் கூறி விவாகரத்து செய்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்டார். உ.பி.,யைச் சேர்ந்த சானியா என்ற இளம்பெண்ணுக்கும், மஹாராஷ்டிராவில் வேலை பார்க்கும் சலாவுதீன் என்பவருக்கும், 2023 ஆகஸ்டில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பேசியபடி, சானியாவின் பெற்றோர் வரதட்சணை மற்றும் சீர் பொருட்களை கணவர் குடும்பத்திற்கு வழங்கினர்.அது போதாது என கூறி, சலாவுதீனின் சகோதரியர் மூவர் மற்றும் தாய் தொடர்ந்து பலமுறை சானியாவை தொந்தரவு செய்து வந்தனர். இதுகுறித்து, போலீசில் அந்த பெண் புகார் கூறினார். அவரது வீட்டுக்கு சென்று விசாரித்த எஸ்.ஐ., ஜெய்பிரகாஷ் சிங், வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.இந்நிலையில், தாய் வீட்டில் இருந்த மனைவி சானியாவை, சமீபத்தில் போனில் அழைத்த சலாவுதீன், நீண்ட நேரம் பேசிய பின், மனைவியிடம் மூன்று முறை 'தலாக்' என கூறி, விவாகரத்து செய்வதாக தெரிவித்தார். இதனால் மனமுடைந்த சானியா அன்று இரவே வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து அறிந்த எஸ்.பி., கவுரவ் குரோவர், புகார் தெரிவித்தும், வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறி, எஸ்.ஐ., ஜெய்பிரகாஷ் சிங்கை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண்கள், மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதம் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

lana
மே 02, 2025 13:57

மூர்க்கம் ஒரு இனிய மார்க்கம். இங்கு சாதி இல்லை வரதட்சிணை இல்லை. நம்புங்க


Prasanna Krishnan R
மே 02, 2025 13:35

உண்மையான..........


RAMAKRISHNAN NATESAN
மே 02, 2025 11:56

ஆனால் மார்க்கம் உருட்டுவது என்னவென்றால் பெண்களுக்கான மார்க்கம், பெண்களைப்போற்றும் என்று ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை