மேலும் செய்திகள்
சாந்த சொரூபியான 'பண்டே மஹாகாளி'
03-Dec-2024
மனிதர்கள் வாழ்க்கையில் எவ்வளவு செல்வம், செழிப்பு இருந்தாலும் நோயில் சிக்கிக் கொண்டால் மன நிம்மதி போய்விடும். அதிலும் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் தொற்றுநோய் மிகவும் ஆபத்தானது. இத்தகைய தொற்றுநோயை சரி செய்யும் ஒரு கோவில் உள்ளது.பெங்களூரு ரூரல் ஆனேக்கல் அருகே உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இக்கிராமத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் மத்துாரம்மா கோவில் உள்ளது. இந்த கோவில், மத்துாரம்மா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இந்த தெய்வத்தை கிராம தெய்வமாக மக்கள் வணங்குகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரலில் கொண்டாடப்படும் ஆண்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 120 அடி உயரம் கொண்ட தேர் வீதிகளில் உலா வரும். தேரை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.கோவிலின் ஒரே கருவறையில் இரண்டு தேவிகளின் மூர்த்திகள் உள்ளன. இது மிகவும் அரிதானது. தொற்றுநோயால் பாதிக்கப்படுவோர், இந்த கோவிலில் வந்து அம்மனை தரிசனம் செய்தால், நோய் வேகமாக குணமடையும் என்ற நம்பிக்கை உள்ளது.அம்மனின் பார்வை, தங்கள் மீது பட்டால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்று இங்கு வரும் பக்தர்கள் சொல்கின்றனர். தமிழகத்தின் எல்லையோரம் கிராமம் அமைந்துள்ளதால், கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த கோவிலுக்கு அதிகம் வருகின்றனர்.கோவிலின் நடை தினமும் அதிகாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்து இருக்கும்.
பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து ஹூஸ்கூருக்கு, '349 சி' என்ற பி.எம்.டி.சி., பஸ் இயக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து ஓசூர் செல்லும் மெமு ரயிலில் சென்றால் ஹீலலிகே ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லலாம். - நமது நிருபர் -
03-Dec-2024