உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செனாப் நதியில் நீர்மின் திட்டம்: டெண்டர் கோரியது மத்திய அரசு: பாகிஸ்தான் அதிர்ச்சி

செனாப் நதியில் நீர்மின் திட்டம்: டெண்டர் கோரியது மத்திய அரசு: பாகிஸ்தான் அதிர்ச்சி

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் சிந்து கிராமம் அருகே செனாப் நதியில் 1,856 மெகாவாட் சாவல்கோட் நீர்மின் திட்டம் அமைப்பதற்காக மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் கூறி வந்தாலும், எல்லை தாண்டிய ஒப்பந்த்தை நிறுத்தும் வரை செய்ய முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q70995be&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி, பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளின் நீரை கட்டுப்படுத்துகிறது. சிந்து , செனாப் மற்றும் ஜீலன் நதிநீர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள நதிகளில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் ஒரு பகுதியை இந்தியா தனது சொந்த நோக்கத்துக்காக பயன்படுத்தலாம் என ஒப்பந்தம் கோருகிறது.இந்நிலையில், ஒப்பந்தம் ரத்தான பிறகு நீரை பயன்படுத்துவது தொடர்பாக திட்டங்களை மத்திய அரசு தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரின் ரம்பான மாவட்டத்தின் சிந்து கிராமத்தில் செனாப் நதியில் 1,856 மெகாவாட் சாவல்கோட் நீர்மின் திட்டத்துக்கு மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. தேசிய நீர்மின் கழகம் இந்த திட்டத்துக்கான டெண்டரை ஆன்லைனில் செப்., 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.செனாப் நதியில் நீர் மின் திட்டம் தயாரிப்பது தொடர்பாக 1960ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் சில பிரச்னைகள் காரணமாக இது செயல்படுத்தப்படவில்லை. ஆனால், தற்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஆக 01, 2025 09:45

அடுத்த உலகப்போர் இந்தியா பாகிஸ்தான் சண்டையிலிருந்து ஆரம்பமாகும். அதுவும் தண்ணீர் தட்டுப் பாடில்தான் ஆரம்பமாகும்னு 29, 30 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க.


கண்ணன்
ஆக 01, 2025 10:46

பாவம், அப்பாவிகளுக்கு உள்நாட்டு நடப்பே புரியாத போது பன்னாட்டு நடப்புகள் எப்படிப் புரியும்?


Ramesh Sargam
ஜூலை 31, 2025 21:07

பாகிஸ்தானுக்கு Operation Sindoor மட்டும் போதாது. இப்படி நீர்மின் திட்டம் போன்று பல திட்டங்களை அறிவித்து அவர்களை கொட்டத்தை அடக்கவேண்டும்.


Sampath
ஜூலை 31, 2025 20:48

இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எம் இயற்கை அன்னையின் பாலை தடுப்பது யார். இயற்கை கொடையை தடுக்க யார் கொடுத்த அதிகாரம் . பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்....ஒரு தறுதலை குரைக்க ஆரம்பிக்கும் .....


MARUTHU PANDIAR
ஜூலை 31, 2025 20:31

பலே பாணடியா , பலே திட்டத்தை எதிர்த்து வின்சி தலைமையில் குடும்பத்தோடு உண்ணாவிரதம், பன்னாட்டு ஏஜெண்டு சாராய புகழ் கெஜ்ரி ஏற்பாடு செய்யும் காலிஸ்தானிகளின் தர்ணா , மற்றும் ரோடு மறியல், நம்ம டுமீல் நாட்டிலிருந்து கிளம்பி வரும் தொப்புள் கொடி சப்போர்ட்டு ஆட்களின் அலப்பறை, மமதா, அகிலேஷ் இன்ன பிற ... இவை நிச்சயம் பெரிய அளவில் தலைவலி ஏற்படுத்தும். நீர்மின் திட்டம் கால் பங்கு என்றால் இவனுகளை சமாளிப்பது முக்கால் பங்கு.


அரவழகன்
ஜூலை 31, 2025 19:17

பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் ஆதரவாக குரல் கொடுப்பது இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கத் தானே...?


Anand
ஜூலை 31, 2025 18:40

இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்குமோ என்னவோ தெரியவில்லை, ஆனால் இங்குள்ள கூட்டுக்களவாணிகள் தங்களின் கட்ட்ட்டும் கண்டனத்தை தெரிவிக்கக்கூடும்.


ASIATIC RAMESH
ஜூலை 31, 2025 18:20

சபாஷ்.. சீக்கிரம்.... இதில் அரசியல் சமரசம் வேண்டாம்.... நம் நாட்டிற்கு தேவையானது.. மாநிலத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்....


புதிய வீடியோ