உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி

நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி

மஹா கும்பநகர்:உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சி, கடந்த 13ல் துவங்கியது. பிப்., 26 வரை இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 10 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 42, மஹா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக, பிரயாக்ராஜுக்கு நேற்று வந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடினார். இதன் பின், செய்தியாளர்களிடம் மேரி கோம் கூறுகையில், ''மஹா கும்பமேளாவுக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்த பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி. இது தான் என் முதல் அனுபவம். ''நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கும்பமேளாவுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்தேன். இதில் பங்கேற்றது மகிழ்ச்சி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Enrum anbudan
பிப் 03, 2025 13:44

இது கடவுளின் பாரம்பரிய நிகழ்ச்சி அதில் நீங்கள் கலந்து கொள்வது உங்கள் ஜென்ம சாபல்யம். கடவுள் அனுக்கிரகம் உங்களுக்கு உள்ளது. ஆதரவு என்ற வார்த்தை தேவை இல்லாதது.


Enrum anbudan
பிப் 03, 2025 13:42

கும்ப மேளாவுக்கு உங்கள் ஆதரவு தேவை இல்லை. உங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கின்றது


சமீபத்திய செய்தி