மேலும் செய்திகள்
டில்லி பக்கமே வரமாட்டேன்: நிதின் கட்கரி
03-Dec-2024
புதுடில்லி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது:டில்லிக்கு ஒவ்வொரு முறை போகும்போதும் காற்று மாசு அதிகமாக இருப்பதால், போகலாமா, வேண்டாமா என பலமுறை யோசிப்பேன். காற்று மாசு, அங்கு அளவுக்கு அதிகமாக இருப்பதால், எனக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. டில்லியில் வாழ எனக்கு பிடிக்கவில்லை. அங்கு புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதே மாசுபாட்டைக் குறைக்க சிறந்த வழி. இவ்வாறு அவர் பேசினார்.
03-Dec-2024