உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை நீதிபதியை தாக்கியதில் வருத்தமில்லை: சொல்கிறார் வழக்கறிஞர்

தலைமை நீதிபதியை தாக்கியதில் வருத்தமில்லை: சொல்கிறார் வழக்கறிஞர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : '' தலைமை நீதிபதி மீது காலணியை வீசியதற்கு பயப்படவில்லை. அதற்கு வருத்தப்படவும் இல்லை'' என அதனை செய்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர், தன் காலில் அணிந்து இருந்த காலணியை கழற்றி தலைமை நீதிபதி கவாயை நோக்கி எறிய முயன்றார். அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து வெளியே இழுத்துச் சென்றனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. அவரை சஸ்பெண்ட் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் காலணியை வீசிய ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் அளித்த பேட்டியில் கூறியதாவது: எனது பெயர் ராகேஷ் கிஷோர். இதனை வைத்து யாராவது என் ஜாதியை சொல்ல முடியுமா?செப்டம்பர் 16 ம் தேதி தலைமை நீதிபதி முன்பு பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதனை கிண்டல் செய்த அவர், சிலையிடம் சென்று வழிபடுங்கள். அதன் தலையை மீட்டெடுக்க சொல்லுங்கள் என்றார். நுபுர் ஷர்மா வழக்கு விசாரணைக்கு வரும் போது, அவர் சூழ்நிலையை மாற்றிவிட்டார் என நீதிமன்றம் சொன்னது. ஆனால், சனாதன தர்மம் குறித்த விஷயம் வரும் போது, நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்கிறது. மனுதாரருக்கு நிவாரணம் வழங்காமல், அவரை கேலி செய்யாதீர்கள். நான் காயப்பட்டுள்ளேன். நான் மதுபோதையில் இல்லை. இது தான் அவரது செயலுக்கு எதிர்வினை. எனக்கு பயமில்லை. நடந்ததற்கு வருத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V.Mohan
அக் 07, 2025 21:59

சிலையிடம் சென்று வழிபடுங்கள், அதன் தலையை மீட்டெடுக்கச் சொல்லுங்கள்-ஆஹா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கிண்டல் சூப்பர் உச்சநீதிமன்றத்தை நீதி வேண்டி அணுகியவருக்கு நல்ல மரியாதை தரப்பட்டு உள்ளது. எப்படியும் கேஸை விசாரித்தபின் ஒருதலைபட்ச முடிவு தரப்படும். தகுதியற்றதாக கருதினால் அபராதம் கூட வரும். இவ்வளவு முடிவுகளூக்கு வாய்ப்பு உள்ளபோது, நீதிபதி கேஸையும், அதை போட்டவரையும் கிண்டல் செய்து பேசுவது நல்ல முன்னுதாரணம். சனாதன தர்மம் மற்றும் ஹிந்து கடவுள்களின் வழிபாடு பற்றி நாட்டின் உச்சநீதிமன்றமும், தலைமை நீதிபதியும் இவ்வாறு தரம் தாழ்ந்து கிண்டல் செய்து பேசுவது வருந்த வேண்டிய விஷயம். இதே தலைமை நீதிபதி மற்ற மதங்களின் வழிபாட்டு முறைகள், அதன் பிரச்னைகள் பற்றி ஒரு வார்த்தை பேச """மனத்தெம்பு """" இருக்க வாய்ப்பே இல்லை. என்ன ஒரு ஒருதலைபட்ச நிலைப்பாடு . சனாதன தர்மத்தை பற்றி எப்படி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம், கை தட்ட, பின்பாட்டு பாட பெரிய குரூப்பே தயார் அடிப்படை உரிமையாவது, ஒண்ணாவது, ஹூம்..


Venugopal, S
அக் 07, 2025 21:13

இது கருப்பு கொடி காட்டுவது போலத்தான்


sankaranarayanan
அக் 07, 2025 21:06

தலைமை நீதியும் இப்படி ஒரு மூத்த வழக்கரை, வழக்கு வெகு தீவிரமாக சென்றுகொண்டிரும்போது பேசியிருக்க வேண்டாம் இதுபோன்று வேறு மதத்தினரை அவர் சொல்ல முடியுமா என்பதுதான் மக்களின் கேள்வி. கேலியும் கிண்டலும் செய்ய தேவை இல்லை அது அவரின் மனதை வெகுவாக பாதித்துள்ளது அதற்கு அவர் செய்தது மாபெருந்தவறு தான் இது முறை அல்ல அல்ல.


சுலைமான்
அக் 07, 2025 20:55

தன்மானமுள்ள தலைசிறந்த வழக்கறிஞர்.


நிக்கோல்தாம்சன்
அக் 07, 2025 19:25

தலைமை நீதிபதி தனது பதவியை தவறாக உபயோகப்படுத்தியதால் விரக்தி அடைந்த வழக்கறிஞர் என்று நம்புகிறேன்


புதிய வீடியோ