வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தோனிசிய அதிபர் சொன்னது முற்றிலும் உண்மை, நாங்கள் அடிக்கடி இந்நதோனிசியா செல்கிறோம், நம்முடைய பெயர்கள், கலாச்சாரம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் பேசிய இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ, தன் உடலில் இந்திய மரபணு இருப்பதாக கூறியதை கேட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.நாட்டின், 76வது குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ளார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.இவர்களுக்கு, டில்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ பேசியதாவது:
இந்தியாவும், இந்தோனேஷியாவும் நீண்ட, பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளன. எங்களுக்குள் நாகரிக தொடர்புகள் உள்ளன. எங்கள் மொழியின் மிக முக்கியமான பகுதிகள் சமஸ்கிருதத்தில் இருந்து வந்துள்ளன.இந்தோனேஷிய பெயர்களில் சமஸ்கிருதம் உள்ளது. எங்கள் அன்றாட வாழ்வில், பண்டைய இந்திய நாகரிகத்தின் தாக்கம் வலுவாக உள்ளது. இது, எங்கள் மரபியலின் ஒரு பகுதி என நினைக்கிறேன்.கடந்த சில வாரங்களுக்கு முன், என் மரபணு வரிசையை பரிசோதித்தேன். என் உடலில் இந்திய மரபணு இருப்பது தெரியவந்தது. இவ்வாறு அவர் பேசினார். இதை கேட்டு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் குலுங்கி குலுங்கி சிரித்தனர். ஹிந்தி பாடல் பாடி அசத்தல்
தேநீர் விருந்தின் போது விருந்தினர்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது, இந்தோனேஷிய அதிபருடன் வந்திருந்த அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவை சேர்ந்த ஐந்து பேர், பாட்டு பாட விரும்புவதாக தெரிவித்தனர்.இசைக்குழுவினருடன் இணைந்து, 'பாலிவுட்' நடிகர் ஷாருக்கான் - காஜோல் நடிப்பில், 1998ல் வெளியான, குச் குச் ஹோத்தா ஹை திரைப்பட பாடலை அவர்கள் பாடி அசத்தினர். ஹிந்தி திரைப்படங்களுக்கு இந்தோனேஷியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்தோனிசிய அதிபர் சொன்னது முற்றிலும் உண்மை, நாங்கள் அடிக்கடி இந்நதோனிசியா செல்கிறோம், நம்முடைய பெயர்கள், கலாச்சாரம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.