உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் பாலத்தை தரிசித்து ஆசி பெற்றேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ராமர் பாலத்தை தரிசித்து ஆசி பெற்றேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ராமேஸ்வரம்: '' இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை தரிசிக்கும் ஆசி கிடைத்தது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார். ஹெலிகாப்டரில் வரும் போது ராமர் பாலத்தை தரிசனம் செய்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c6sbx0dd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், அத்துடன் பதிவில் கூறியுள்ளதாவது: இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை ஹெலிகாப்டரில் இருந்து தரிசனம் செய்யும் ஆசி கிடைத்தது. அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே வேலையில் தற்செயலாக ராமர் பாலத்தை தரிசித்தேன். இரு தரிசனத்தையும் பெறுவது பாக்கியம். நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக கடவுள் ஸ்ரீராமர் உள்ளார். அவரது ஆசிர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்து இருக்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

J.Isaac
ஏப் 07, 2025 13:19

எந்த வருடம் ராமர் பாலம் கட்டினார்?


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
ஏப் 06, 2025 20:14

ராமபிரானின் அவதாரம்.... ராம்... ராம்.....


RAMESH KUMAR R V
ஏப் 06, 2025 17:12

கடவுளின் பரிசு


Venkatesan
ஏப் 06, 2025 13:38

Noble man.