உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் அப்படி சொல்லவே இல்லை: சர்ச்சை எம்பி மஹூவா மொய்த்ரா சமாளிப்பு

நான் அப்படி சொல்லவே இல்லை: சர்ச்சை எம்பி மஹூவா மொய்த்ரா சமாளிப்பு

கோல்கட்டா: அமித் ஷா குறித்து தான் பேசிய பேச்சுக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திரிணமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திரிணமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7gi1fylx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'வங்கதேசத்தினரின் ஊடுருவலை தடுக்க முடியாவிட்டால், அமித் ஷாவின் தலையை வெட்டி உங்கள் (பிரதமர்) மேஜையில்தான் வைக்க வேண்டும். வேறு வழியில்லை,' என்று மஹூவா பேசினார்.இந்த நிலையில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், போலீசார் தனது பேச்சை திரித்து விட்டதாகவும் திரிணமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; வங்காள மொழியில், 'மாதா காட்டா ஜாவா', 'மாதா கே டெபி லே ரகா' என்று சொன்னேன். அதற்கு பொறுப்பேற்பது, பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்று பொருள்படும். இது ஒரு பழமொழி. நிச்சயமாக, முட்டாள்களுக்குப் பழமொழிகள் புரியாது,' என்று கூறியுள்ளார்.சர்ச்சை பேச்சுக்காக அவர் மீது சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசார் வழக்கு பதிந்த நிலையில், இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

HoneyBee
செப் 01, 2025 17:03

இவங்க அடுத்த திராவிட மாடல் அக்கா... பொய் சொல்லி ஸ்டிக்கர் ஒட்டுராங்க


kumran
செப் 01, 2025 15:48

இதை செய்தியாக வெளியிட்டது ஊடகங்கள் தான் அதன் பின்னர் கைது நடவடிக்கை என்ற செய்தி வந்தது ஆக தற்துறி என்ற விமர்சனம் தேவையற்றது மேலும் இந்த எம்பி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றவர் ஆக நம்பகத்தன்மை அற்றவர்


Mahendran Puru
செப் 01, 2025 14:44

அவர் பின் வாங்கவில்லை. பழமொழி புரியாத தற்குறிகள் என்று லந்து அடித்துவிட்டார்.


Balachandran Rajamanickam
செப் 01, 2025 12:27

பெங்காலி இல்லையே தங்காலி பழமொழியோ.


சமீபத்திய செய்தி