உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் திரும்பி வருவேன்; வங்கதேச அரசுக்கு ஷேக் ஹசீனா சவால்!

நான் திரும்பி வருவேன்; வங்கதேச அரசுக்கு ஷேக் ஹசீனா சவால்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நான் வங்கதேசத்துக்கு மீண்டும் வருவேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்' என அந்த நாட்டு இடைக்கால அரசுக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால் வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியை கைப்பற்றியது. இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்க தேச அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.தற்போது, இடைக்கால அரசை, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக சாடியுள்ளார். நிகழ்ச்சியில் ஒன்றில் அவர் பேசியதாவது: நான் திரும்பி வருவேன். அதனால் தான் அல்லா என்னை உயிருடன் வைத்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வேன். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நான் உதவி செய்வேன். போராட்டத்தின் போது மக்களை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெறுவதை உறுதி செய்வேன். எனது ஆட்சி காலத்தில் போலீசார் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் நிதானத்தை கடைபிடித்தனர். ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது, ஆனால் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை தொடர்கிறது.

தகுதி இல்லை

முகமது யூனுஸ் ஆட்சி செய்ய தகுதியற்றவர். அவரால் நாட்டை வழி நடத்த முடியவில்லை. பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. மாணவர்கள் தொடங்கிய கலவரம் போலீசார், எனது கட்சியினர் கொல்ல வழிவகுத்தது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு யூனுஸின் ஆட்சியின் கீழ் நீதி கிடைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Laddoo
பிப் 18, 2025 13:47

திரும்பி வந்து யூஸ்லெஸ் யூனுசுக்கு ஆப்படிக்க வேணும்


Sivagiri
பிப் 18, 2025 13:27

சான்ஸ் இருக்கு, ஏன்னா, அமேரிக்கா, கனடா, இங்கெல்லாம் இருந்து வந்து கொண்டிருந்த சிக்கனல்கள், இப்போ மாறி விட்டன . . . ஆட்சிகள் மாறிவிட்டன . . காட்சிகளும் மாறும் . . .


S SRINIVASAN
பிப் 18, 2025 10:56

Appadi podu arivala


MUTHU
பிப் 18, 2025 09:42

அரசியலை பொறுத்தமட்டில் இந்த அம்மா கருவாடு. இனிமேல் மீனாக முடியாது.


Anand
பிப் 18, 2025 10:46

நீங்க மட்டுமல்ல கேடுகெட்ட மூர்க்கங்க எல்லாரும் அப்படிதான் நினைக்கிறாங்க..


நிக்கோல்தாம்சன்
பிப் 18, 2025 09:23

மூர்க்கர்கள் மத்தியில் ஒரு குறிஞ்சிபூ


ஹசன்
பிப் 18, 2025 09:14

இன்னும்.பதவி ஆசை விடலை. சீக்கிரம் போங்க.


RAJ
பிப் 18, 2025 08:29

தமிழன்னு பெயரை வச்சுக்கிட்டு.. மூளையை கழட்டி வச்சுட்டு கருத்து போடுற... பெயரை மாற்றிக்கொள்..


Mani Iyer
பிப் 18, 2025 08:16

அதை ஒழுங்கா வரி கட்டுகிற நாங்க பார்த்துக்கறோம்... அதனால நீங்க கவலைப்படவேண்டாம்


karthik
பிப் 18, 2025 08:11

இங்க கோவை லே வெடி வெச்சவனுக்கு ராஜ மரியாதையோடு அனுப்பினார்களே எந்த மக்களோட வரி பணத்தை விடியல் செலவு செஞ்சாரு?


sankaranarayanan
பிப் 18, 2025 07:51

முன்பு தலாய்லாமாவிற்கு அடைக்கலம் இப்பொது ஷேக் ஹஸீனாவிற்கு அடைக்கலம் இருவரும் அமைதியை விரும்புவார்கள் இந்திய கலாசாரத்தை வெகுவாக மதிப்பவர்கள் நாம் அவர்களுக்கும் முழு ஒத்துழைப்பும் தக்க தருணத்திலும் உதவியும் செய்ய வேண்டும்