உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்னும் 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்; சொல்கிறார் 90 வயதான தலாய் லாமா!

இன்னும் 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்; சொல்கிறார் 90 வயதான தலாய் லாமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்,' என 90 வயதான தலாய் லாமா தெரிவித்து உள்ளார்.திபெத்தை சேர்ந்த புத்த மதத்தலைவர் தலாய் லாமா, சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து ஹிமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார். அவருக்கு நாளை (ஜூலை 06) 90 வது பிறந்த நாள்.இதையொட்டி, இன்று (ஜூலை 5) ஹிமாச்சலபிரதேசத்தின் மேக்லியாட் கஞ்ச் பகுதியில் உள்ள புத்த மத வழிபாட்டு தலத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் தலாய் லாமா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளுக்குமேல் வாழ விரும்புகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் இதுவரை பலனளித்துள்ளன. நாட்டை நாம் இழந்தபோதும், நாம் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறோம்.தர்மசாலாவில் வாழும் மக்களுக்கு நான் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுவதை பலமுறை உணர்ந்துள்ளேன்.என்னால் முடிந்தவரை மக்களுக்கு நன்மையும், சேவையும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தாமரை மலர்கிறது
ஜூலை 06, 2025 02:41

ராஜபோக வாழ்க்கை. இவர் பசியாற யாரோ ஒருவர் உழைக்கிறார், பிறகென்ன இன்னும் ஐநூறு ஆண்டுகள் வாழ கூட ஆசை இருக்கும்.


subramanian
ஜூலை 05, 2025 21:52

இன்னும் அறுபது ஆண்டுகளுக்கு வாழ வேண்டும். வெகு விரைவில் திபெத் சுதந்திரம் கிடைக்கும்.


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 21:30

வந்தவர்கள் எல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில்..


பலராமன்
ஜூலை 05, 2025 20:58

நாற்பது என்ன இறுநூறு ஆண்டுகள் வாழ வேண்டும்


Anantharaman Srinivasan
ஜூலை 05, 2025 20:58

எல்லா ஆசையையும் துறந்த பின் தான் துறவியாக முடியும்.இந்த புத்ததுறவிக்கு அரசியல்வாதியை விட ஆசை அதிகமிருக்கு.


Svs Yaadum oore
ஜூலை 05, 2025 20:57

தலாய் லாமா இன்னும் 900 ஆண்டுகள் கூட வாழலாம் ....உண்மையான பௌத்த மதம் திபெத்தை சேர்ந்த புத்த மதம் ....இங்குள்ள மாட்டுக்கறி தின்னும் விடியல் திராவிடனுங்க புத்த மதம் திபெத்தில் கிடையாது ....புத்தர் சொல்லியதே அஹிம்சை .....ஆனால் திராவிடனுங்க பௌத்தர் சிலையை டேபிள் மேல் வைத்து அங்கேயே மாட்டுக்கறி திம்பானுங்க ....


Matt P
ஜூலை 05, 2025 20:51

கடவுளால் ஆசிர்க்கப்படுவதில் நம்பிக்கை இருந்து சொர்க்கத்தில் நம்பிக்கை இருந்தால் சொர்க்கத்துக்கு போக விரும்பலாமே. ஆசை பேராசை தான். மண்ணாசையை புத்தர் விரும்பினாரா? எந்த ஆசையை துறக்க வேண்டும் என்று தானே புத்தர் விரும்பினார்.


ManiK
ஜூலை 05, 2025 19:45

பாரதத்தில் உருவாகிய வாழ்க்கைமுறை அனைத்தும் மனிதகுலத்தின் மனநலம்,, உடல்நலம் உயர வழிவகை தருகின்றன. கன்வர்ஷன் நோக்கமே கிடையாது. தலாய் லாமா திபெத் நாட்டை மீண்டும் பெற்று பாரம்பரிய புத்தமதத்தை மேலோங்க செய்ய வேண்டுகிறேன். ஹிந்துக்களின் துணை எப்போதும் உண்டு.


தியாகு
ஜூலை 05, 2025 19:23

இவர் ஒரு துறவி, ஊழல் செய்வதில்லை, லஞ்சம் வாங்குவதில்லை, அடுத்தவர்களின் சொத்தை ஆட்டையை போடுவதில்லை. இன்னும் நாற்பது வருடங்கள் என்ன, நானூறு வருடங்கள் கூட வாழ்ந்துவிட்டு போகட்டும் தவறில்லை.


V Venkatachalam
ஜூலை 05, 2025 19:06

கடவுளின் ஆசி பெற்றவர். அவர் இன்னும் 40 ஆண்டுகள் வாழ்ந்து தொண்டு செய்ய வேண்டும்.


சமீபத்திய செய்தி