உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேட்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவேன்: சிராக் பஸ்வான்

கேட்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவேன்: சிராக் பஸ்வான்

புதுடில்லி: ''பீஹார் சட்டசபை தேர்தலில், நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை தே.ஜ., கூட்டணி வழங்கும் என, நம்புகிறோம். கூட்டணியில் அசவுகரியமாக உணர்ந்தாலோ அல்லது சங்கடம் ஏற்பட்டாலோ வெளியேறி விடுவேன்,'' என, லோக் ஜனசக்தி ராம்விலாஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் எச்சரித்துள்ளார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்., - நவ ம்பரில் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பீ ஹாரில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, லோக் ஜனசக்தி ராம்விலாஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால், மாநில அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கட்சிகளே இடம் பெற்றுள்ளன. மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணி அரசில், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, லோக் ஜனசக்தி ராம் விலாஸ் அங்கம் வகிக்கின்றன. இதில், லோக் ஜனசக்தி ராம்விலாஸ் தலைவர் சிராக் பஸ்வான், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் அளித்த பேட்டி:

பீஹாரின் ஒவ்வொரு தொகுதியிலும், 20,000 - 25,000 ஓட்டுகள் எங்களுக்கு தாராளமாக கிடைக்கும். ஓட்டுகளை பாதிக்கும் திறன், எங்களுக்கு உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், எங்களுக்கு நல்ல எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும். என் மனதில் குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ளது. அதை பொது வெளியில் கூற முடியாது. எதிர்பார்க்கும் தொகுதிகளை, தே.ஜ., கூட்டணி வழங்கும் என, நம்புகிறேன். என்னை பீஹார் முதல்வராக பார்க்க என் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். அரசியலில் இது சாதாரணம். பீஹாரில் தே.ஜ., கூட்டணி அரசில் நாங்கள் இடம்பெறவில்லை. மத்தியில் மட்டுமே அங்கம் வகிக்கிறோம். கூட்டணியில் அசவுகரியமாக உணர்ந்தாலோ அல்லது சங்கடம் ஏற்பட்டாலோ, சி றிதும் யோசிக்காமல் வெளியேறி விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

எத்தனை தொகுதிகள் எதிர்பார்க்கிறார்?

பீஹாரில் 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், 135 தொகுதிகளில் போட்டியிட்ட பிளவுபடாத லோக் ஜனசக்தி, ஒரேயொரு இடத்தில் மட்டுமே வென்றது. அதே சமயம், 2024 லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியின் அங்கமாக, பீஹாரில் போட்டி யிட்ட ஐந்து தொகுதிகளிலுமே சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி வென்றது. தொடர்ந்து அவர், மத்திய அமைச்சரானார். லோக்சபா தேர்தல் வெற்றியை கருதி, வரும் சட்ட சபை தேர்தலில், 40 தொகுதிகளை அவர் எதிர்பார்க்கி றார். ஆனால், தே.ஜ., கூட்டணியோ அவருக்கு 2 0 தொகுதிகளை வழங்க முடி வு செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kulandai kannan
செப் 17, 2025 20:00

இவர் பாலிவுட்டில் முயற்சித்துத் தோற்றவர். தேஜஸ்வி யாதவ் IPLல் இடம் கிடைக்காமல் தோற்றவர். இவனுங்களெல்லாம் தலைவர்களாவது வாரிசு அரசியலால் மட்டுமே.


Hindu
செப் 17, 2025 09:55

மோடி சா தே ஜ கூட்டணிகளின் ஒரே கூட்டணி நிரந்தர கூட்டணி தேர்தல் கமிஷன் மட்டுமே. வேறு யாரைப்பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை


k g Sekar
செப் 17, 2025 06:32

Will you resign you Ministership also


நிக்கோல்தாம்சன்
செப் 17, 2025 03:34

வாரிசு அரசியல் ஒழிக


சமீபத்திய செய்தி