உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓடவும் இல்ல, ஒளியவும் இல்ல... சங்கம் மீது அவதூறு பரப்பாதீங்க: மோகன்லால் பேட்டி

ஓடவும் இல்ல, ஒளியவும் இல்ல... சங்கம் மீது அவதூறு பரப்பாதீங்க: மோகன்லால் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம் : மலையாள நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த மோகன்லால், ‛நான் எங்கும் ஓடி ஓளியவில்லை, நடிகர் சங்கமான அம்மா மீது அவதூறு பரப்பாதீர்கள்' என கேட்டுக் கொண்டார். மலையாள திரையுலகில் சமீபத்தில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது நடிகைகள் சிலர் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. மலையாள நடிகர் சங்கமான ‛அம்மா' ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தது. தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேரும் பதவி விலகினர். இந்த விவகாரத்தில் பிரச்னைக்கு தீர்வு காணாமல் நடிகர் சங்கம் ராஜினாமா செய்தது கோழைத்தனமான செயல் நடிகை பார்வதி உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர்.

ஓடி ஒளியவில்லை

இந்த விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், அம்மா அமைப்பின் தலைவராக இருந்த மோகன்லால். அவர் கூறுயைில், ‛‛அம்மா சங்கத்தில் நான் இரு முறை தலைவராக இருந்துள்ளேன். பாலியல் புகார் எதிரொலியால் நடிகர் சங்கம் கலைக்கப்பட்டாலும் சங்கம் தொடர்ந்து செயல்படுகிறது. அதன் பணிகளை செய்கிறது. பேரிடர் காலத்தில் பல உதவிகளை சங்கம் செய்தது. அதன் மீது அவதூறு பரப்பாதீர்கள். மலையாளத்தில் 21 சங்கங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் நடிகர் சங்கத்தை மட்டும் குறை கூறுவது சரியல்ல. நான் இங்கு தான் இருக்கிறேன், எங்கும் ஓடி ஒளியவில்லை. இந்த விஷயத்தில் அரசு தனது கடமையை செய்யும்.

மலையாள சினிமா பாதிக்க கூடாது

பாலிவுட்டை போன்று மலையாள சினிமா பிரமாண்டமானது அல்ல கஷ்டபப்பட்டு முன்னேறி வருகிறது. இந்த விவகாரத்தால் மலையாள சினிமா பாதிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். கடைநிலை தொழிலாளர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டில் இருந்து மலையாள சினிமாவை காக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதில் இருந்து மீண்டு வர வேண்டும். பாலியல் தொடர்பான பிரச்னையில் அனைத்து துறைகளிலும் மாற்றம் வர வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் என்ன இருந்தது என எனக்கு தெரியாது. ஆனால் அதை வரவேற்கிறேன், விசாரணை நடைபெறுகிறது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பாலியல் குற்றச்சாட்டு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இனி அதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு வெல்லட்டும். நீதிமன்றத்தில் உள்ள பிரச்னைகளை நான் பேச முடியாது. விசாரணை குழுவிற்கு முழு ஒத்துழைப்பு தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mr Krish Tamilnadu
செப் 01, 2024 13:26

அசிங்கப்படுத்தியதின் தீர்வு அசிங்கப்படுத்துதல். ஹேமா கமிட்டியால் குற்றம் கூறப்படும் நபர்கள், திரையுலகை விட்டு ஒதுக்குங்கள் என தைரியமாக கூறுங்கள் சார். அவர்களிடம் கூறுங்கள்,உங்களால் கலைத்துறையே ஸ்தம்பித்து விட்டது என்று. சட்டம் அதன் கடமையை அது தனியே செய்யட்டும். திரைதுறை சார்பாக, நீங்கள் என்ன தண்டனை தருகிறீர்கள்? உங்களுடைய யார் முதுகும் தூய்மையில்லை யா?. குற்றத்தை சுட்டி காட்டும் தகுதியற்றவாரா, அனைவரும்?. அந்த பெண்கள் நீதிக்காக இவ்வளவு காலம் காத்திருந்தார்கள்?. ஆகவே தடுக்க முடியாத நீங்கள் தீர்வு வரும் வரை காத்திருப்பது தான் நல்லது. அமைதி காக்கவும்.


GMM
ஆக 31, 2024 19:37

பாலியல், தீண்டாமை வழக்கில் பாதிக்கப்பட்டவரை விட அதிக பலம் அடைவது அரசியல் வாதிகள், போலீசார், வழக்கறிஞர்கள்.? முதலில் இனிக்கும். புகார் முடிந்தாலும் கசக்கும். காங்கிரஸ் சட்டம் அனைத்தும் ஒரு பக்க நாணயம் போன்றது? தற்போது மம்தா மாநில மருத்துவர் கொலையில் குடும்பம் ஒரு கிளாஸ் தண்ணீர் பெற்ற தகவல் இல்லை.? மறைக்க முயன்ற மற்றவர்கள் வெள்ளை, கறுப்பு பணம் பரிசு பெற்று இருப்பர்.? பண்புள்ள பெண்ணை துன்புறுத்திய நபருக்கு 6 மாதத்தில் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். சிறையில் தான் உயிர் பிரிய வேண்டும். பிடித்தம் இன்மை, உட்பகை காரணமான புகாரை விரும்பும் அதிகாரிகள்/பெரியவர்கள் / நம்பிக்கையானவர் முன்னிலையில் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். இது பாதிக்கப்பட்டவருக்கு எதிர்காலத்தில் உதவலாம்.


Nandakumar Naidu
ஆக 31, 2024 19:18

இவர்களெல்லாம் என்னமோ சத்தியவான் மாதிரி பேசுகிறார்கள். மொத்த திரையுலகமே நாறிக்கிடக்கிறது. இதில் மற்றவர்கள் அவதூறு பரப்புகிறார்கள் என்று பேச்சு வேறு.


அசோகன்
ஆக 31, 2024 17:23

நாங்க இங்கேதான் இருக்கிறோம்..... சினிமா சான்ஸ் வேணும்னா நடிகைகள் எங்களை இரவில் சந்திக்கலாம் ???


ஆரூர் ரங்
ஆக 31, 2024 16:46

சமீபத்தில்தான் மலையாள படவுலகம் தரமான சிறிய பட்ஜெட் படங்கள் மூலம் மீண்டது. ஆனால் பழைய பாவங்கள்? விடாது கருப்பு.


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 31, 2024 16:46

பிடித்து உள்ளே போட்டு பிதுக்கினால் பாதி குற்றம் குறைந்துவிடும்


ஆரூர் ரங்
ஆக 31, 2024 16:44

தமிழகத்து மருமகன். பாவம். தடுமாறுகிறார். உறவினர் ரஜினி மாதிரியே.


Mohan das GANDHI
ஆக 31, 2024 15:34

THERE SHOULD BE A COMMISSION JUSTICE VERDIT MUST NEEDED SUCH KERALA, TAMILNADU, ANDHRA, TELUNGANA, KANNADA MALE ACTORS AND THE CULPRITS SHOULD GO TO JAIL ATLEAST 25 YEARS IMPRISSONNEMENT. WHEN JUSTICE DO THEIR JOB VERY STRICKT THEN THE CRIME WILL DISAPPEAR FROM THESE STATES IS REALITY ? ? ?


ponssasi
ஆக 31, 2024 15:31

நான் சுத்தமானவன் அப்படீன்னு உன்னால சொல்லமுடியல.


முக்கிய வீடியோ