உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துடைப்பேன்; பெருக்குவேன் நளின்குமார் கட்டீல் உருக்கம்

துடைப்பேன்; பெருக்குவேன் நளின்குமார் கட்டீல் உருக்கம்

தட்சிண கன்னடா : ''யார் வேட்பாளர் ஆனாலும், பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம். கட்சி தலைமை, துணியால் துடையுங்கள் என்றால் துடைப்பேன், துடைப்பத்தால் பெருக்குங்கள் என்றால் பெருக்குவேன்,'' என பா.ஜ., --- எம்.பி., நளின்குமார் கட்டீல் தெரிவித்தார்.தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.,யாக பதவி வகிப்பவர் பா.ஜ.,வின் நளின்குமார் கட்டீல். 2009, 2014, 2019 ஆகிய மூன்று தேர்தலிலுமே அவர் தொடர்ந்து வெற்றி பெற்றார். நான்காவது முறையாக, 2024லிலும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில் மிதக்கிறார். ஆனால், தொகுதியில் இவரது செல்வாக்கு குறைந்துள்ளதாக பா.ஜ., மேலிடத்தின் சர்வேயில் தெரிய வந்துள்ளது.இதனால், மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்று பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கேப்டன் பிரிஜேஷ் சவுடாவை களமிறக்க மேலிடம் யோசித்து வருகிறது. இவர் தற்போது, மாநில செயலராக பொறுப்பு வகிக்கிறார்.இது குறித்து, எம்.பி., நளின்குமார் கட்டீல், மங்களூரில் நேற்று கூறியதாவது:சாமானியர்களின் கட்சி பா.ஜ., தான். சாமானிய தொண்டனான என்னை அடையாளம் கண்டு, மாநில தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பை வழங்கியது. சாதக பாதகங்களை ஆராய்ந்து தான், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.கட்சி என்பது ஒரே இடத்தில் நிற்கும் நீராக மாற கூடாது. புதியவர்கள் வர வேண்டும்; கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும். அந்த வகையில், மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்.யார் வேட்பாளர் ஆனாலும், பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம். கட்சி தலைமை, துணியால் துடையுங்கள் என்றால் துடைப்பேன், துடைப்பத்தால் பெருக்குங்கள் என்றால் பெருக்குவேன்.நாங்கள், கட்சியை அடிமட்டத்தில் வளர்த்த தொண்டர்கள். அனைவரையும் வளர்ப்பதே கட்சியின் நோக்கம். ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றால், அவரை கட்சி ஓரங்கட்டியதாக அர்த்தம் இல்லை. அவருக்கு எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த பதவி கிடைக்கும் என்று அர்த்தம்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்