உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போச்சு; வெள்ளத்தில் இறங்கியதால் தப்பியது ஹெலிகாப்டர்!

தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போச்சு; வெள்ளத்தில் இறங்கியதால் தப்பியது ஹெலிகாப்டர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், இன்ஜின் கோளாறு காரணமாக வெள்ளநீரில் தரையிறக்கப்பட்டது. வேடிக்கை பார்க்க திரண்ட மக்கள், ஹெலிகாப்டரில் இருந்த பொருட்களை அள்ளிச்சென்றனர்.பீஹாரில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் தவித்துவரும் நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.அந்த வகையில், 3 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று வானத்தில் பறந்து கொண்டிருந்த போது இன்ஜின் பழுதடைந்தது. இதனையடுத்து விமானி சமயோசிதமாக செயல்பட்டு அந்த ஹெலிகாப்டரை, முசாபூர் நகரில் வெள்ளநீரில் உடனடியாக தரையிறக்கினார். இதனால், அதில் இருந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஹெலிகாப்டர் தரையிறங்கியது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அந்த இடத்திற்கு படகில் வந்து அதில் இருந்த நிவாரண பொருட்களை அள்ளிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
அக் 02, 2024 18:51

வெள்ளநீரால் பாதிப்படைந்துள்ள பிஹாருக்கு உடனடியாக பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். செழிப்புள்ள மற்ற மாநிலங்கள் தமிழகம் உட்பட தலா நூறு கோடி கொடுப்பது நல்லது. அல்லது அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை கொடுக்க வேண்டும்.


கோபு
அக் 02, 2024 18:50

ரஃபேல், அப்பாச்சிகளை களத்தில் இறக்கியிருக்கலாமே. சும்மாதானே நிக்குது.


அஸ்வின்
அக் 02, 2024 16:51

வடக்கன்க காட்டு மிரான்டிக


Kumar Kumzi
அக் 02, 2024 17:41

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட அதெல்லாம் சாப்பாட்டு சாமான் தண்ணில பழுதா போகும்னு கொஞ்சம் சரி அறிவா யோசிக்க மாட்டியா கூமுட்ட


சமீபத்திய செய்தி