மேலும் செய்திகள்
தமிழ் ஐ.பி.எஸ்., முருகனுக்கு புதிய பொறுப்பு
07-Jun-2025
புதுடில்லி:டில்லி அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விவரம்:* தில்ராஜ் கவுர், பொது நிர்வாகத்துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சமூக நலம் மற்றம் எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினர் நலத்துறை அதிகாரியாகவும் செயல்படுவார்உயர் கல்வித்துறை செயலராக இருக்கும் நந்தினி பாலிவால், வர்த்தகம் மற்றும் வரித்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். நந்தினி பாலிவால் கவனித்த பணியிடத்திற்கு பாண்டுரங் கே போலே நியமிக்கப்பட்டுள்ளார்.அரசின் நிலங்கள் மற்றும் கட்டடத்துறை கோட்ட கமிஷனராக இருக்கும் நீராஜ் செம்வால், அந்த துறையின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.போக்குவரத்து துறை செயலராக இருக்கும் நிஹரிகா ராய், டில்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனின் தலைவராக, கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.டில்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனராக இருக்கும் பிரின்ஸ் தவான், அந்த துறையின் சிறப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலராக ராஷ்மி சிங்; பொதுப்பணித்துறையின் சிறப்பு செயலராக இருக்கும் கிருஷ்ணன் குமார், பேரிடர் மேலாண்மை துறையின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.மின் துறையின் சிறப்பு செயலராக இருக்கும் ரவி தவான், இனிமேல், டில்லி ஜல் போர்டின் ஒரே ஒரு நிர்வாக உறுப்பினராக பொறுப்பு வகிப்பார்.ரவி தவானிடம் இருந்த மின் துறை சிறப்பு செயலர் பதவிக்கு, ரவி டாடிச் நியமிக்கப்பட்டுள்ளார்.டில்லி வடக்கு மேற்கு துணை கமிஷனராக இருக்கும் சவுமியா சவ்ரப் பணியிடத்திற்கு அங்கிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சவுமியா சவ்ரவ், பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி துறை சிறப்பு செயலராக பணியாற்றுவார்டில்லி தெற்கு துணை கமிஷனராக பணியாற்றும் மேகலா சைதன்யா பிரசாத், டில்லி தென் மேற்கு துணை கமிஷனராக பணியாற்றுவார். அந்த பணியிடத்தில் இருந்த லக் ஷய் சிங்கால், டில்லி தெற்கு வருவாய் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். தடயவியல் அறிவியல் துறையின் முதன்மை இயக்குனராக டாக்டர் அனில் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
07-Jun-2025