உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரும் 31க்குள் முதலீடு செய்தால் மகளிர் சேமிப்பு திட்டத்தில் 40% வரை பணம் எடுக்கலாம்

வரும் 31க்குள் முதலீடு செய்தால் மகளிர் சேமிப்பு திட்டத்தில் 40% வரை பணம் எடுக்கலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில், 40 சதவீதம் வரை பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை, தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. நம் நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காக, கடந்த 2023 ஏப்., 1-ல் 'மகிளா சம்மான் சேமிப்பு' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், குறைந்தது, 1,000 ரூபாயில் இருந்து 2 லட்சம் வரை வைப்பு நிதியாக முதலீடு செய்யலாம். மாதந்தோறும், 1,000 ரூபாய் வீதமாகவும் பணம் செலுத்தலாம். மொத்தமாக 2 லட்சமும் முதலீடு செய்யலாம். அதற்கு, ஆண்டுக்கு 7.5 சதவீதம் நிலையான வட்டி; அதுவும் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வழங்கப்படும். குறிப்பிட்ட வங்கிகள், தபால் அலுவலகங்களில் முதலீடு செய்யலாம். பொருளாதார ரீதியாக பெண்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் துவங்கப்பட்டது. இந்நிலையில், இந்த சேமிப்பு திட்டத்தில் போடும் வைப்பு நிதியில் இருந்து 40 சதவீதம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும், 31ம் தேதிக்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை கிடைக்கும். தபால் துறை ஊழியர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் பேங்கிங் முறையில் பணம் எடுக்கும் இந்த திட்டமானது, கடந்த 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தபால் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Priyan Vadanad
மார் 25, 2025 07:09

அஞ்சல் துறை தருவது 7.5 சதவீத வட்டி. அதில் GST என்று எவ்வளவு பிடித்தம் என்பதையும், எடுக்கும் 40 சதவீதத்துக்கு எத்தனை சதவீத வட்டியை நாம் GST யுடன் கொடுக்க வேண்டும் என்பது பற்றி ஏன் சொல்லவில்லை? வங்கிகளிடம் தேவையான பணம் போது இல்லை. டெபாசிட் போடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். வங்கிகளிடம் இருக்கும் பணம் பல லட்சம் கோடிகள் எங்கோ யாருக்கோ போய்விட்டது என்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. நமது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? அடிமட்ட மக்களை வளரவிடாமல், அவர்களது காயவைப்பதுதான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியா?


Nedumaran
மார் 25, 2025 10:59

7.5% என்பது ஒரு பெரிய வட்டி அல்ல. மேலும் இரண்டொரு நாட்களுக்கு முன் Time Deposit-ல்- 5 ஆண்டு காலத்திற்கு 1 லட்சம் முதலீடு செய்தால் ஐந்தாண்டு முடிவில் 45000 வட்டி கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் கிடைப்பது 38000 மட்டுமே. இது போன்று பொய் தகவல்களை பரப்புகின்றார்கள். அதற்குப் பதிலாக வட்டி விகிதத்தை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது


ஆரூர் ரங்
மார் 25, 2025 14:21

வட்டிக்கு ஜிஎஸ்டி பயங்கரமான கற்பனை. 200 க்கு இது ஜாஸ்தி.


Paramasivam
மார் 25, 2025 18:27

வட்டித்தொகைக்கு ஜிஎஸ்டி யா? இத்தனை நாட்களாக தாங்கள் இருந்த இடம் சந்தேகமாக இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை