உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வந்தே பாரத் ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு

வந்தே பாரத் ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு

புதுடில்லி'வந்தே பாரத்' ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு வழங்கும் வசதி அறிமுகமாகிறது.இதுகுறித்து ரயில்வே வாரியம் கூறியதாவது:வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவின்போது, உணவு விருப்பத்தை தேர்வு செய்யாமல் பயணம் செய்யும்போது, சில பயணியர் உணவு கேட்பதால், அடிக்கடி பிரச்னை எழுகிறது. பணம் கொடுத்தும் ஐ.ஆர்.சி.டி.சி., ஊழியர்கள் உணவு தர மறுப்பதாக பயணியரிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருவதால், டிக்கெட் முன்பதிவில் உணவு விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும் கூட, ரயில் பயணத்தின்போது, பணம் கொடுத்து உணவை பெறும் வசதி, வந்தே பாரத் ரயில்களில் அறிமுகமாகிறது.ரயில் பயணியருக்கு தரமான உணவை வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி, ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே வாரியம் தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Karthik
பிப் 08, 2025 14:31

எந்த ஒரு ரயிலிலும் பயணி பயணத்தின்போது உணவருந்தட்டும். ஆனால் அது ஓடும் ரயிலில் சமைத்ததாக இருக்க கூடாது. மாறாக, ஆர்டரின் பேரில் அது குறிப்பிட்ட, வரவிருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஒரே கேட்டரிங் சர்வீசால் தயாரித்து விநியோகிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் ரயிலில் தீ விபத்து தவிர்க்கப்படும், தயாரிப்பு/ விநியோக சேவை மேம்படும். இதன்மூலம் ரயில்வேயில் பாதுகாப்பான, நம்பகத்தன்மையுடனான பயண சேவையை பயணிகளுக்கு வழங்கிட முடியும். சிந்திக்குமா மத்திய , ரயில்வே துறை??


அப்பாவி
பிப் 08, 2025 08:55

எக்ஸ்ட்ரா வா புழு, பூச்சி புரோட்டீனும் உண்டு. அதுக்கு காசு கிடையாது. கண்டு புடிச்சு சொன்னா உணவு ஃப்ரீ.


pandit
பிப் 08, 2025 06:48

பிரியாணி, குவாட்டர் கண்டிப்பாக கிடையாது.


தமிழன்
பிப் 08, 2025 03:05

கரப்பான் பூச்சி, தவளை, பல்லியுடனா இல்லை சுத்தமாகவா??


சமீபத்திய செய்தி