உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்க மொழி பேசினால் வங்கதேசத்தினரா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

வங்க மொழி பேசினால் வங்கதேசத்தினரா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

'வங்க மொழி பேசுகின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை வங்கதேசத்தினராக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் வங்க மொழி பேசக்கூடிய பலரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறி நாடு கடத்தப்படுவதாகவும், இதற்கு எதிரான உத்தரவை பிறப்பிக்கக் கோரி மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், ஜாய்மாலியா பக் ஷி மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி ஜாய்மாலியா பக் ஷி , ''ஒருவர் என்ன மொழி பேசுகிறார் என்பதை அடிப்படையாக வைத்து, அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்? ஒருவர் பேசக்கூடிய மொழி என்பது அவருடைய குடியுரிமையை நிர்ண யம் செய்வதாக இருக்கக் கூடாது,'' என்றார். அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதிடுகையில், ''மேற்குவங்க மாநிலத்தில் எல்லையோரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் பலரும் எல்லை பாதுகாப்பு படையினரால் வலுக்கட்டாயமாக வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ''அவர்கள் வங்க மொழி பேசுகின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை அதிகாரிகள் வங்கதேசத்தவர்களாக கருதுகின்றனர்,'' என்றார். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''தனி நபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றால், அவர்கள் நீதிமன்றத்திற்கு வரட்டும். அதைவிடுத்து, இந்த அமைப்பு எதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்தியா சட்டவிரோத குடியேறிகளை ஏற்றுக் கொள்ளும் தலைநகரம் கிடையாது. ''சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவின் வளங்களை உறிஞ்சி கொழுப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது,'' என, வாதிட்டார். கோரிக்கை மேலும், 'சட்ட விரோத குடியேறிகள் தொடர்பான மற்ற வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றுடன் சேர்த்து இதை விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து, வங்கதேச குடியேறிகள் விவகாரத்தில் மத்திய அரசு தனியாக பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர். -டில்லி சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Narasimhan Krishnan
ஆக 30, 2025 22:21

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஹை கோர்ட்களில் வாதாடும் மூத்த வழக்கறிஞர்களின் மீது வழக்கு தொடர் வேண்டும் அல்லது அவர்களுடைய தொடர்பில் உள்ளவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் பெரும்பாலும் இவர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் முக்கியமாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரின் மகன் தான் அவர். சாமானியம் பலமான பொருளாதார பின்புறம் இல்லாத ஏழை மீதுள்ள சிறிய குற்றவாளிகளின் மீதுள்ள நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் பைசல் செய்யாமல் இம்மாதிரி அரசியல் நோக்கங்களுக்காக வழக்கு நடத்தும் நபர்கள் தொடுக்கும் வழக்குகளை பொதுநலம் கருதி ஏன் உடனே விசாரிக்க வேண்டும். இம் மாதிரி நபர்களை பாப்புலராக ஆக்குவதே நீதிமன்றங்கள் தான். முதலில் இவர்களுக்கு சமுதாயத்தில் கட்டுப்பாடு இல்லை போலீஸ் இவர்களை கட்டுப்படுத்தாது கோர்ட்டும் இவர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ளாது ஆகவே எந்த அரசாங்கமும் இவர்களிடம் பயந்து கொண்டே இருக்க வேண்டுமா? . எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற இடையூறு செய்யும் இவர்களை சமுதாயம் வேறு வகையில் புறக்கணிக்க முயற்சி செய்து இவர்களை திருத்த வேண்டும். சட்டத்தின் மூலம் கோர்ட்டின் மூலம் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிகிறது.


V Venkatachalam
ஆக 30, 2025 20:29

அரசியல் வியாதிங்களை விட கோர்ட் மோசமாகிக்கொண்டிருக்கிறது. கள்ள பணம் வக்கீல் பாக்கெட்டுகளை தாண்டி நீதிபதிகளின் வீடுகளை தாண்டி கோர்ட்டுக்குள்ளும் புகுந்து விட்டது. நீதிபதி பதிகள் கேக்குற கேள்விகள் தேசப் பற்று கொண்ட வர்களை கேவலப்படுத்துவதாகவே இருக்கிறது.‌தேச பக்தி உள்ள நீதிபதிகளுக்கே பஞ்சமா? அல்லது நீதிபதிகள் இந்த அடாவடி வக்கீல்களின் பிடியில் இருக்கிறார்களா? ஒன்னுமே புரியலை. ஆனால் தினமும் கோர்ட்டில் நடக்கும் கூத்துகளை பார்த்தால் தலைமை நீதி மன்றமே இந்தியாவை வித்துடும் போல இருக்கே. நினைக்கவே அச்சமா இருக்கு.


Neelachandran
ஆக 30, 2025 19:43

இந்தியாவில் சிலர் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள்.அவர்கள் பிரிட்டனைச் சேர்ந்தவர்களா?


Venugopal S
ஆக 30, 2025 13:09

இந்த உச்ச நீதிமன்றமும் எத்தனை தடவை தான் அடி கொடுப்பார்களோ? அப்படியும் கொட்டம் அடங்கியபாடில்லை!


கண்ணன்
ஆக 30, 2025 12:27

புலம் பெயர்ந்தோர் சங்கம எற்றால் என்ன எற்றுகூடப் புரியாதவர்களையா நாம் நீதிபதிகளாக் வைத்துள்ளோம்?


Sundar R
ஆக 30, 2025 10:40

மேற்கு வங்காளத்திலும், பங்களாதேஷிலும் பெங்காலி மொழியைத் தான் பேசுகிறார்கள் என்பது பாரத மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாரத-வங்கதேச எல்லையோரம் காணப்படுபவர்களை, அவர்கள் பெங்காலி மொழியைப் பேசுபவர்களாக இருந்தாலும், அவர்களிடம் நமது நாட்டிற்கான குடிமகன் என்பதற்கான ஆதாரங்களுக்கு தேவையான போதிய சான்றிதழ்கள் இல்லை என்றால் தான், அவர்கள் விதேசிகளாகக் கருதப்பட்டு, நம் நாட்டின் எல்லைக்கப்பால் வெளியேற்றப் படுவார்கள். இது அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப் படுகிற சாதாரண நடைமுறை. மலிஞ்ச விலை அரசியல் செய்யும் கட்சியினர்களும், வேலை வெட்டி இல்லாதவர்களும் தான் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவார்கள்.


Anand
ஆக 30, 2025 10:25

ஊடுருவல்காரர்களுக்கும், மொள்ளமாரி, முடுச்சவுக்கிகளுக்கும் முட்டுக்கொடுப்பதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. நாடு கெட்டுப்போக வானத்தில் இருந்து குதித்த இதுகள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


பெரிய குத்தூசி
ஆக 30, 2025 10:19

இந்த சட்ட விரோத குடியேறிகளின் படிப்பு சம்பந்தமான இந்தியாவில் பள்ளியில் படித்த முதல் வகுப்பில் படித்த சான்றிதழ் முதல் சமர்ப்பித்து, பள்ளி வாரியாக verify செய்தவுடன் இந்தியரா வங்கதேசத்தவரா என கோர்ட் முடிவுசெய்யலாமே. வக்கீல்கள் பிரஷாந்த் பூசன், கப்பில் சிபிள் இருவருமே தேசத்திற்கு எதிரான தேச விரோத வழக்குகளுக்கு மட்டுமே ஆஜராகக்கூடியவர்கள்.


Sun
ஆக 30, 2025 08:58

திராவிடர்கள் தமிழ் மொழியில் தான். அனால் இனம் என்பது திருட்டு திராவிடம்.


GMM
ஆக 30, 2025 08:37

மேற்கு வங்க தொழிலாளர்கள் எங்கு இருந்து புலம் பெயர்வு என்று கூறாமல், வங்கதேச புலம்பெயர் தொழிலாளர்கள் நல சங்கம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிபதி நிராகரித்து இருக்க வேண்டும். தனி நபர் குடியுரிமை பிரச்னை. தேசிய பிரச்னை. ஊருடன் மக்களை அரசு வெளியேற்ற முடியாது. மேற்குவங்க எல்லையோரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் தான் இந்திய குடிமகன் என்று ஆதார படுத்தும் போது எப்படி இந்திய எல்லை பாதுகாப்பு படை வலுக்கட்டாயமாக வங்கதேசத்திற்கு அனுப்புவர்? ஆதார படுத்த முடியாதவர் கள்ள குடியேறிகள். பூஷன் ஆதாரம் இல்லாமல் பொதுவாக கூறும் தகவலை நீதிமன்றம் எப்படி ஏற்கிறது? பாக். வங்க தேசம் குடிமக்கள் இந்தியாவில் ஊடுருவதை ஊக்க படுத்தி வருகிறது. தன் குடிமக்களை தேடுவது இல்லை.


சமீபத்திய செய்தி