உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துருக்கி பல்கலையுடன் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது ஐ.ஐ.டி., மும்பை

துருக்கி பல்கலையுடன் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது ஐ.ஐ.டி., மும்பை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதை அடுத்து, துருக்கி பல்கலைகளுடனான ஒப்பந்தங்களை, ஐ.ஐ.டி., மும்பை நிறுத்தி வைத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7ல், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானை நம் ராணுவத்தினர் கதிகலங்க வைத்தனர். தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., நம் படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதை நம் ராணுவத்தினர் முறியடித்தனர். பாக்., கெஞ்சியதை அடுத்து, போர் நிறுத்தம் அமலானது. நம் நாட்டின் மீது பாக்., ஏவிய ட்ரோன்கள், மேற்காசிய நாடான துருக்கிக்கு சொந்தமானவை என்பது தெரிய வந்தது. விசாரணையில், 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மட்டுமின்றி, அதை இயக்க ஆப்பரேட்டர்களையும் பாகிஸ்தானுக்கு துருக்கி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து இந்தியா - துருக்கி இடையேயான உறவில் கசப்பான நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இந்தியர்களும், துருக்கிக்கு சுற்றுலா செல்வதை புறக்கணித்து வருகின்றனர். உத்தரகண்டில் உள்ள ஐ.ஐ.டி., ரூர்க்கி நிர்வாகம், துருக்கியின் இனோனு பல்கலை உடனான ஒப்பந்தத்தை சமீபத்தில் ரத்து செய்தது.இதன் தொடர்ச்சியாக, ஐ.ஐ.டி., மும்பை நிர்வாகமும், துருக்கி பல்கலைகளுடனான ஒப்பந்தங்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
மே 19, 2025 04:05

சிறப்பு. டிரோன் கொடுத்து உதவிய துருக்கிக்கு வைத்து செய்ய வேண்டும். நவீன தீவிரவாதத்தின் தந்தை துருக்கிதான். இன்னும் அத ஒட்டோமான் பேரரசின் பிரதிநிதிகள் போல செயல்பட்டு வருகிறார்கள். இனப்பெருக்கத்தை மூலம் ஐரோப்பா பொட்டல் காடாவது அவர்களின் முக்கிய குறிக்கோள். அது விரைவில் நடக்கும். இன்றைய அளவில் பிரிட்டன் கூட முடிந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது.


xyzabc
மே 19, 2025 00:23

Wonderful news on behalf of IIT Bombay. Very appreciated.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை