உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.ஐ., டாப் 100 வரிசையில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்

ஏ.ஐ., டாப் 100 வரிசையில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்

புதுடில்லி : ஏ.ஐ., தொழில்நுட்பத்தில், உலகின் டாப் - 100 பிரபலங்களின் பட்டியலை, அமெரிக்காவின் 'டைம்' இதழ் வெளியிட்டுள்ளது. இதில், எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் போன்ற 'டெக்' ஜாம்பவான்களுடன் சென்னை ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மிதேஷ் காப்ரா இடம் பிடித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற நுாற்றுக்கணக்கான ஐ.ஐ.டி., மாணவர்கள், உலகில் உள்ள டாப் ஏ.ஐ., நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வருகின்றனர். தவிர இந்திய மொழிகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் ஏறக்குறைய துல்லியமாக வேலை செய்வதற்கு காப்ராவின் பங்கு கணிசமாக இருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி.,யில் துணை பேராசிரியராக பணியாற்றும் காப்ரா, இந்தியாவுக்கான, 'ஏ.ஐ., பாரத்' என்ற தளத்தின் துணை நிறுவனர். இந்த தளம் இந்திய மொழிகளில் ஏ.ஐ., கருவிகளை பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை செவ்வனே செய்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Subramanian
செப் 04, 2025 07:39

வாழ்த்துகள்


நிக்கோல்தாம்சன்
செப் 04, 2025 06:56

வாழ்த்துக்கள்


Varadarajan Nagarajan
செப் 04, 2025 05:57

வாழ்த்துக்கள். உலகின் தலைசிறந்த முதல் 100 பெயரில் நமது இந்தியரும் இருப்பது நமக்கு மிகவும் பெருமை. அதோடு அவரது நிறுவனம் நமது இந்திய மொழிகளில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் சிறந்ததாக ஆக்கியதற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். நமது இந்தியர்களின் அறிவுத்திறமையால் வெளிநாடுகளில் பல நிறுவனங்கள் பயனடைகின்றன. அவற்றை மாற்றும் நேரம் வந்துவிட்டது. அவரது பனி சிறக்க வாழ்த்துக்கள்


Modisha
செப் 04, 2025 04:58

இப்போது கேலி பேசுங்களேன் வடக்கன் என்று .


Amar Akbar Antony
செப் 04, 2025 04:53

வடக்கானுக்கு எது தேவையோ அதை எங்கிருந்தாலும் எடுப்பான். பானிப்பூரி விக்கவும் தெரியும் டைல்ஸ் ஒட்டவும் தெரியும்.. படித்து அடுத்தவனுக்கு புரியவைத்து முன்னேற்றவும் முடியும். நிறைகுடம் ததும்பாது.


Kasimani Baskaran
செப் 04, 2025 03:45

சூப்பர். இதற்க்கு பெரியார்தான் காரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை