உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள்: காணிக்கை வழங்கிய இளையராஜா

கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள்: காணிக்கை வழங்கிய இளையராஜா

உடுப்பி : கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு பல கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க நெக்லஸ் மற்றும் வாளை வழங்கினார் இசையமைப்பாளர் இளையராஜா.தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர் இளையராஜா. ஆயிரத்து ஐநூறு படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர். சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையமைத்து மற்றொரு மைல்கல்லை எட்டி சாதித்தார். ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார். ஆன்மிகத்தில் அதிக பக்தி கொண்ட இவர் கர்நாடக மாநிலம், உடுப்பியை அடுத்துள்ள கொல்லூரில் அமைந்துள்ள மூகாம்பிகை கோயிலுக்கு நேற்று சென்று வழிபட்டார். உடன் அவரது மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவும், பேரன் யத்தீஸ்வரும் சென்றிருந்தனர்.இளையராஜா குடும்பத்தினர் சார்பில் மூகாம்பிகைக்கு வைரத்தால் ஆன கிரீடம், தங்கத்தால் ஆன நெக்லஸ் மற்றும் அங்குள்ள வீரபத்திர சுவாமிக்கு தங்கத்தால் ஆன வாள் ஆகியவை காணிக்கையாக வழங்கப்பட்டவ. இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆபரணங்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூகாம்பிகை மற்றும் வீரபத்திரருக்கு அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து இளையராஜாவிற்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. கோவிலில் இருந்தவர்கள் இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா உடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 12, 2025 01:59

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிரம் நாட்டல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறி வித்தல்.


dandanakka
செப் 12, 2025 08:43

உங்களின் எல்லா அழும் கூடங்களை இடித்து விட்டு நீங்கள் சொல்வதை செய்யவும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 11, 2025 19:59

இந்த எட்டு கோடியை வைத்து பண்ணைப்புரத்தில் ஒரு இலவச மருத்துவமனை கட்டி இருக்கலாம். பிறந்த ஊருக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் .


T.Senthilsigamani
செப் 11, 2025 20:31

ஜெய்ஹிந்த்ப்புரம் - இதே கேள்வியை தசம பாகம் என்ற பெயரில் கிறிஸ்து நியாயப் பிரமாணத்தின்படிகிருஸ்துவ கோவில்களுக்கு லட்சம் லட்சமாய் அள்ளி அள்ளி கொடுப்பவர்களிடம் சொல்ல முடியுமா ? இளையராஜா கொல்லூர் மூகாம்பிகையின் பரம பக்தர் .பலப்பல வருடங்களாக அந்த கோவிலுக்கு சேவைகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் .ஒரு ஹிந்து பக்தன் ஹிந்து கோவிலுக்கு கொடுக்கும் போது எழும் விமரிசனங்கள் மற்ற மத காணிக்கைகளுக்கு வருவது இல்லை .இதுதான் போலிமதசார்பின்மை வாதம் . பண்ணைபுரத்தின் மேம்பாட்டிற்கு அந்த பகுதியை சேர்ந்த MLA ,MP ,Municipal Chairman என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் அதுதான் சரியான செயல் . இளையராஜா அவரின் சுய சம்பாத்தியத்தில் இருந்து தான் கொடுக்கிறார் . அதனை குறை கூற யாருக்கும் தகுதி இல்லை .இசை யோகியின் செயலை மாற்று மதத்தினரும் வாழ்த்துங்கள்...


G Mahalingam
செப் 11, 2025 21:19

அந்த கோவில் மூலமாக நல்ல திட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் மருத்துவமனை கட்டினால். 30 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டி வரும்.


Sivak
செப் 11, 2025 19:30

தன்னை இந்த அளவிற்கு வாழ்வில் உயர்த்திய தாய்க்கு நன்றி கடன் செலுத்துகிறார் இளையராஜா ...


M Ramachandran
செப் 11, 2025 18:32

நல்ல வேலை அந்த கோயில் தமிழ் நாட்டிலேயில்லை. நீங்க கொடுக்கும் காணிக்கை பொருள் கைமாறி தலைமை குடும்ப பெட்டகத்திக்கிற்கு மாற்றி விட்டுடுவார் அயோக்கிய சிகாமணி.


Rathna
செப் 11, 2025 18:31

காஞ்சி மஹாபெரியவரிடம் பக்தி கொண்டவர். அவரிடம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரு மாம்பழத்தை பிரசாதமாக பெற்றவர். திருவண்ணாமலை ரமணரிடம் அதிக பக்தி கொண்டவர். எல்லாம் வல்ல தாய் அவருக்கு, குடும்பத்திற்கு நன்மையை வழங்கட்டும்.


என்னத்த சொல்ல
செப் 11, 2025 18:01

தமிழ்நாட்டில் கோவில்களே இல்லையா ராஜாசார்.. இங்கும் மூகாம்பிகை கோவில்கள் நிறைய உண்டே..


Sivak
செப் 11, 2025 19:19

ஆனா இங்க திருட்டு திமுக இருக்கே என்ன பண்றது .....


ramesh
செப் 11, 2025 17:54

கோவிலுக்கு இதனை கோடிகளில் வைர கிரீடம் உள்பட காணிக்கை வழங்குவது நல்ல விஷயம் தான் . ஆனால் ஸ்டேஜ்இல் s p பாலசுப்ரமணியன் பாடிய பாடல்களுக்கு ராயல்டி கேட்டாரே அதனால் அவர்கள் உறவு விரிசல் ஏற்பட்டதே . இதற்கும் இந்த பணம் தான் காரணம் . இத்தனைக்கும் இவர்கள் இருவர் முன்னேற்றத்துக்கும் இவர் பாடியதும் அவர் இசை அமைத்ததும் தான் முக்கிய காரணம் என்பதும் அனைவரும் அறிந்ததே


SANKAR
செப் 11, 2025 19:30

this issue is a dark spot on his character...not only singer but also poet cameraman sound recordist editor and ultimately director are there to make a song success .


Vasan
செப் 11, 2025 17:19

Long live Ilayaraja Sir.


vns
செப் 11, 2025 17:06

இளையராஜாவின் காணிக்கைகள் அவருக்கு திரு மூகாம்பிகையின் அருளை வாரி வழங்கட்டும்


பிரேம்ஜி
செப் 11, 2025 17:03

பாராட்டுக்கள்! வாழ்க வளமுடன்!


முக்கிய வீடியோ