உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் சட்ட விரோத குடியேற்றம்: வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தல்

டில்லியில் சட்ட விரோத குடியேற்றம்: வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வந்த வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தப்பட்டனர்.டில்லியின் உத்தம் நகர் மற்றும் சாவ்லா ஆகிய பகுதிகளில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக குடியேறி, சிலர் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியேறியவர்களை போலீசார் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த மே மாதம் துவாராகா மாவட்டத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினார் 71 பேரை போலீசார் கைது செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். அவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது விசாரணையில் அம்பலமானது. இதில், வங்கதேசத்தினர் 41 பேர், மியான்மரின் ரோஹிங்கியா மக்கள் 17 பேர், நைஜீரியா நாட்டினர் 13 பேர் ஆவர். அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் கஸ்டடியில் இருந்தனர்.இந்நிலையில், தற்போது அவர்கள் தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விசாக்கள் இல்லாமல் அல்லது சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூன் 07, 2025 13:17

கண்டு கொள்ளாமல் உள்ளே விட்டதும் இவர்களே, இப்போது வெளியே அனுப்புவதும் இவர்களே!


Ramesh Sargam
ஜூன் 06, 2025 21:14

அவர்களுக்கு இடம் கொடுத்து ஆதரித்த இந்திய கழுதைகளையும் நாட்டை விட்டு துரத்தவும்.


Ganapathy
ஜூன் 06, 2025 20:13

இந்த நல்ல காரியத்தை ஆரம்பித்து வைத்த ட்ரம்ப்க்கு நன்றி. அவர் ஆரம்பித்த பிறகுதான் இங்கு ஆட்சியாளர்கள் சுறுசுறுப்பாக இப்போதாவது வந்தேறிகளை வெளியேற்றுகிறார்கள்.


Vijay D Ratnam
ஜூன் 06, 2025 19:05

சட்டவிரோத குடியேறிகளை தங்கள் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தினால், சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடு கடை வாடகைக்கு கொடுத்தால் இரண்டு வருட சிறைத்தண்டனை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்தால் இந்த பிரச்சினைக்கு உடனடியாக ஒரு நிரந்தரமாக ஒரு தீர்வு ஏற்படும். அதைவிடுத்து வீட்டை திறந்து போட்டால் தெருவுல போற நாய்ங்க உள்ளே வரத்தான் செய்யும். கதவை மூடுங்கய்யா.


Nada Rajan
ஜூன் 06, 2025 19:04

சட்ட விரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை அவசியம்


ஆரூர் ரங்
ஜூன் 06, 2025 18:36

குடும்பக் கட்சி அரசியலுக்கும் ஜனநாயகத்துக்கும் என்ன சம்பந்தம்? பிரிவினைவாத அரசியல் செய்யும் உங்களுக்கு எவ்வளவு எம்பிக்களிருந்தாலும் கான்டீன் மட்டுமே நிரம்பும்.


ஈசன்
ஜூன் 06, 2025 18:02

தில்லியில், அதுவும் வெறும் 71 நபர். நாடு முழுவதும் எப்போது வேட்டை நடக்கும். எப்போது வெளியேற்ற படுவார்கள். இந்த சட்ட விரோத குடியேறிகளால் மற்றொரு பிரச்சினையும் உள்ளது. இவர்கள் ஏதாவது குற்ற செயலில் ஈடுபட்டால் சுலபமாக தப்பிக்க முடியும். இங்குள்ளவர்கள் இவர்களுக்கு துணை போவார்கள். மத்திய மாநில அரசுகள் ஏதாவது குற்றம் நடந்தால் தான் விழித்து கொள்ளுமா!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை